பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 என்று திட்டம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள் தனிநாடு கேட்க வேண்டிய அளவிற்கு துரத்தப்படடிருக் கிற' துரத்தப்படுகிற ஒரு சூழ்நிலை உருவாயிற்று. இனி தங்களால் இணைந்திருந்து வாழமுமுயாது என்ற ஒரு நிலைமை ஏற்பட்ட காரணத்தால் விடுதலை போர்க் கொடியை இலங்கையிலே உள்ள தமிழர்கள் உயர்த்தினார் கள். அதன் தொடர்பான விளக்கங்களை நான் இந்தத்தீர் மானத்தின் அடிப்படையிலே இந்த அவையில் எந்தக் கருத் துக்களையும் எடுத்துவைக்க விரும்பவில்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பிரச்சனை இது என்று சொல்லப்பட்டாலும்கூட, அதே முழுக்க முழுக்க என்ற சொற்களை பயன் படுத்தி முழுக்க முழுக்க நான் இதை அறவே தவிர்த்து விடுகின்ற பிரச்சினையும் அல்ல என்பதை இந்த அவையிலே உள்ளவர்களுக்கு அல்ல- இந்தியப் பேரரசை இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த அவையின் சார்பாக இந்ததீர்மானத்தின் அடிப்படை யில் நான் எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மனிதாபிமானப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினைகளில் குறிப்பாக மைனாரிட்டி ரைட்ஸ் இவைகளில் வெளிநாட்டுப் பிரச்சினைகளில் தலையிடு கின்ற உரிமையையும் அவற்றை பேசுகின்ற உரிமையையும் மக்கள் உரிமைச்சங்கங்கள் உலகளவில் பெற்றிருக்கின் றன . என்பதை நாம் மிகத் தெளிவாக அறிவோம். உரிமைச் குறிப்பாக சிறுபான்மையோர் உரிமையானாலும், வெளி நாட்டு குடிமக்களுடைய உரிமையானாலும் இவை களெல்லாம் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் என்பதிலே ஆழ்ந்த கவனத்தை அப்படிப்பட்ட மக்கள் சங்கங்கள் நிலைநாட்டிவருகின்றன. அதேபோல் இந்த அவையிலே உள்ள நான் நம்முடைய தாயத் தமிழகத்தோடு அவைமுன்னவர் நாவலர் எடுத்துக்காட்டியதைப் போல இன உணர்வில், மொழி உணர்வில் பண்பாட்டு உணர்வில் நம்மோடு கலந்திருச்கின்ற இலங்கைத்தமிழர்கள் தமிழர்கள் என்கிற அந்த உணர்வோடு நாம் அணுகுகிறோம் என்றாலும் கூட இந்தியப்பேரரசு மனிதாபிமான உணர்வோடு இந்தப்