பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வந்திருக்கிற தீர்மானத்தை மனநிறைவோடு நான் வழி மொழிந்து தீர்மானம் நிறைவேறுகிறது என்ற அளவோடு இல்லாமல் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை யில்வாழுகிற தமிழர்களின் துயர் தீர்க்கப்பட வேண்டும். அவர் சிந்துகிற செந்நீர் நிறுத்தப்படவேண்டும் என்பதை எடுத்துக் கூறி அமைகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார். (தமிழகச் சட்டப்பேரவையில் கலைஞர் 21.8.81 அன்று ஆற்றிய உரை) 25-8-81 இலங்கைக்குச் சுற்றுலா சென்ற தமிழ் இனைஞர் தனபதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இன்று சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர் கலைஞர் ஒழுங்குப் பிரச்சனையொன்றை எழுப்பிப் பேசினார். கலைஞர் அவர்கள் பேசியதாவது:- இலங்கைக்குத் தமிழகத்திலிருந்து சுற்றுப் பயணம் சென்ற சில தமிழர்களுள் கதிர்காமத்தில் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்புகிற வழியில் தனபதி என்ற ஒரு தமிழ் வாலிபர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி ஏடுகளில் வந்துள்ளது. நேற்றைய தினம் அமிர் தலிங்கம் அவர்களின் செயலாளர் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். இலங்கை அதிகார வட்டாரத்தால் முதலமைச்சருக்கும் மத்திய அரசுக்கும் அப்படிச் செய்தி தரப்பட்டதாக தகவல் வந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட அந்த தமிழ்வாலிபர் தனபதியின் உடல் தமிழகத்திற்கு அனுப்பப்பட இருக்கிறது செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் ட்டன? என்றும் மேற்கொள்ளப் இலங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதையும் அவர்களுக்கு இழைக்கப்படுகிற வன்முறைகளையும் கண்டித்து