பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழன் நாதியற்றவனா? உடன் பிறப்பே, இலங்கைத் தீவில் என்ன நடக்கிறது என்பதற்கு, தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற தனபதி படுகொலை செய்யப்பட்ட கொடுமையான நிகழ்ச்சி யொன்றேபோதும். தமிழர்களைக் கண்டாலே-கண்ட இடத்தில் அவர்களை கண்டதுண்டமாக்க வேண்டும் என்ற வெறியுணர்ச்சியுடன் சிங்களவர்கள் கையில் கொலைக்கருவிகளுடன் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து சென்ற ஒரு தமிழன் கொல்லப்பட் டான் என்றதும் இலங்கை அரசினர் வருத்தம் தெரிவித்துப் பேசுதல் - கடிதம் எழுதுதல்—சிலரைக் கைது செய்தல் போன்ற நாடகங்களை ஆடினாலுங்கூட, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைக்குரலை ஓடுக்க-சிங்களவர்களின் வன்முறை வெறியாட்டத்தை ஊக்கப்படுத்திக் கொண்டே யிருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட தமிழ் நாட்டுக் காரர்களில் ஒரு சிலர், அங்கிருந்த சிங்களவர்களுக்குக் கொடுத்த தொல்லை என்ன? எதுவுமேயில்லை! திருவொற்றியூரைச் சேர்ந்த தனபதி ஒரு தொழிலாளி! அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்! அவரும் அவருடன் சென்ற வர்களும் கதிர்காமம் கண்டு திரும்பும் வழியில் அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பழுது பட்டுவிடுகிறது1 அதைப் பழுது பார்க்க விட்டு விட்டு தனபதியும் வேறு இருவரும் ஒரு முடியலங்காரச் சாலைக்குச் செல்கிறார்கள்! தனபதி முகச் சவரம் செய்து கொண்டு, மற்ற இருவருக்காக வெளியில் உள்ள பலகையில் அமர்ந்து காத்திருக்கிறார். ஆ1 அப்போது சிங்கள வெறியர்கள். கையில் கோடரியுடன் கூட்டமாக வருகின்றனர். தனபதியைக் கண்டதும் '" அதோ ஒரு தமிழன்!” என்ற ஆத்திரம் பீறிட்டெழுகிறது! மான்குட்டி மீது பாயும் ஒநாய்களைப் போல் பாய்கின்றனர்! இரத்தம் கொப்பளிக்கிறது! சிங்களவர் கோடரிக்குக் குருதி இல-3