பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

  • அவர்கள்” என்று குறிப்பிட்டிருப்பது யாரையென்று

தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர்கள்” என்பது, தமிழர்களையும், முஸ்லீம்களை யும் குறிப்பதாகும்! இந்த விளக்கத்திற்குப் பிறகு-மேலே குறிப்பிடப் பட்டுள்ள வே தனை, தரும் பத்துக் கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டுள்ள இடம் இலங்கைத் தீவுதான் என்பதை எல்லோ ரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். A way to fight EELAM” என்ற தலைப்பில் சிங்கள வர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கையில் தான் இந்தப் பத்துக் கட்டளைகள் அச்சியற்றப் பட்டுள்ளன. அந்தத் துண்டு அறிக்கையின் முகவுரையாக எழுதப் பட்டிருக்கிற வாசகங்கள் பயங்கரமானவை1 சிங்களவர் களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் நஞ்சினை உணர்த்தக் கூடியவை! இதோ அந்த வரிகள்! .. உலகிற்கு ஈழம் வேண்டுமென்ற கூப்பாடு, கண்டிக்கத் தக்க ஒன்று! நேரிடையான பகைவர்கள்- மறைமுக மான பகைவர்கள்—அதாவது தமிழர்களும் முஸ்லீம் களும் ஆகிய இருசாராரையும் ஒரேயடியாக ஒழித்து கட்ட வேண்டும். இந்தப் பொதுவான காரியத்தை யொட்டி அனைத்துச் சிங்களவர்களும் வேண்டிய நேரம் இதுதான்! ஒன்றுபட நம்முடைய கோரிக்கையில் வெற்றி பெற நாம் ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்த வேண்டாம்! தமிழ் ஈழத்தை எதிர்க்கக் கூடிய உறுப்பினர்களை தேசீயப் பேரவைக்கும், மற்ற ஜனநாயக அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கக்கூடிய காலம் வரும் வரையில் முழு மையான பொருளாதாரத்துறைப் புறக்கணிப்பு மூலம் தமிழர் முஸ்லீம் ஆகிய இரட்டை எதிரிகளை முறியடிப்போம்!’” இந்த முகவுரையைத் தொடர்ந்துதான், சிங்களவர் கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அம்சத் திட்டத்தை அந்தத் துண்டு அறிக்கை, பிரகடனப்படுத்துகிறது. எத்துணைச் சீற்றமும் வெறித்தன்மையும் வெறுப்பும் கலந்த தாக்குதல்களுக்கு இலங்கைத் தமிழர்கள் ஆளாகி