பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 உமாநாத் உமாநாத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி):- முத லமைச்சர் அவர்கள் இந்த அவையிலே தெரிவித்ததற் கிணங்க அர்த்தால் நடத்தவதற்காக தேதி குறிப்பிட எதிர்க்கட்சிகளையெல்லாம் அழைப்பார் என்று எதிர்பார்த் தோம். ஆனால் அழைப்பு எதுவும் இல்லை. ஆனால் நேற்று முதலமைச்சர் என்ன பேசியிருக்கிறார் என்றால், எந்தக் கட்சியும் பதில் சொல்லவில்லை. என்று பேசியிருக்கிறார்.. ஆகவே தான் நாங்கள் தயார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர் சொல்கிறார். நாங்களும் தயார் என்று சொல்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர்:- தலைவர் அவர்களே, நண்பர் அம்பிகாபதி அவர்களும், நண்பர் உமாநாத் அவர்களும் பேசியதை யொட்டியும் மாண்புமிகு மைச்சர் அவர்கள் ஒரு அரசு நிகழ்ச்சியிலே தெரிவித் துள்ள கருத்துக்களையொட்டியும் நானும் ஓரு சிலவிவரங்களை இந்த அவையின் முன்னால் வைக்கக் கடமைப்பட்டிருக் கிறேன். அவர்கள் அழைப்புக் கடிதமே வரவில்லை என்று சொன்னார்கள். பதில் கடிதம் வரவில்லை என்று முதல்வர் பேசிய செய்தி பத்திரிகையில் வந்த பிறகு, அப்படி ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்த் தேன். ஏறத்தாழ நான்கைந்து நாட்களாக நானும்,எங்கள் கட்சியின் துணைத்தலைவரும் மற்ற உறுப்பினர்களும் இந்த அவையில்தான் இருக்கிறோம். அவையிலோ அல்லது எதிர்க் கட்சித்தலைவர் அறையிலோதான் இருக்கிறோம். அவை முன்னவரோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம். முத லமைச்சரும் இங்கே இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் எந்தத் தேதியில் அர்த்தால் வைத்துக் கொள்வது என்பது பற்றி எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. ஆனால் இன்று தேடிப் பார்த்த பிறகு வீட்டிலே கிடைத்த ஒரு கடிதம் ஒரு அதிகாரியால் எழுதப்பட்டிருக்கிற கடிதம். அவர் "அன் பார்ந்த திரு கருணாநிதி” என்று விளித்து எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் 'டியர் கருணாநிதி" என்று எழுதுவதைப் போல அப்படியே தமிழாக்கம் செய்து எழுதியிருக்கிறார். அதில் ஒன்றும் நான் குறைவாக கருதவில்லை. அந்த கடிதத்தில்—