பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 “அன்பார்ந்த திரு. கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்கும், அநீதிக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொது அர்த்தால் ஒன்று மாநில அளவில் நடத்துவது என்று சட்டமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் அந்த பொது அர்த்தாலை என்றைக்கு நடத்துவது என்று முடிவு செய்வதற்காக சட்டமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நாளைப் பிற்பகல் (26-8-81) வைத்துக் கொள்ளலாமா என்பது பற்றிய தங்களது கருத்தினை முத லமைச்சர் அறிய விரும்புகிறார்கள். தங்களின் கருத்தினை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். . என்று வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு கடிதம் எழுதி, நான் ஒரு தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் ஒவ் வொரு தேதியைக் குறிப்பிட்டு பதில் கடிதம் எழுதி, முடி வெடுப்பது என்றால் அது நிச்சயமாக விரைவில் நடக்காது. அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னால்கூட நடைபெற்றது. அதிலே கூட கலந்து பேசி யிருக்கலாம். அர்த்தாலை தி. மு. கழகமோ மற்ற எந்த எதிர்க்கட்சிகளோ நிராகரிக்கவில்லை. ஒத்துழைப்பதாகத் தான் கூறியிருக்கிறோம். இன்றைக்கும் அந்த ஒத்துழைப் பைத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அர்த்தால் என்று மூதலமைச்சர் அறிவித்த பிறகு கூட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள். வேறு பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைப் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டங்களை, கண்டனக் கூட்டங்களை நடத்தியிருக்கி றார்கள். அதைப் போலத்தான் தி. மு. கழகம் இன்றைக்கு ஒரு மறியலை அடையாளமாக ஒருநாள் நடத்த அனுமதி கேட்டது. ஆனால் அதற்கும், அதற்கு முன் நடத்தவிருக் கின்ற ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு நூற்றுக்கணக்கான தி. மு. கழகத்தோழர் கள், தோண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது எல்லாம் இந்தப் பிரச்சினையில் இங்குள்ள தமிழர்களெல் லாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் ஆகாது என்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள் கிறேன்.