பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உணர்வினை இப்போதும் அனைத்துக் கட்சியினரும் தெரிவித்த தற்காக நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன், முதலமைச்சர் அன்று இந்தப் பிரச்சினைபற்றி பேசியபோது, தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றுவதைவிட மக்களும் நம்மோடு இருக்கிறார்கள் என்கிற உணர்வினை நிரூபிக்கும் வகையில் ஒரு நாள் கதவடைப்பு செய்யலாம் என்ற கருத்தை எடுத்து வைத்தார்கள். அது சம்பந்தமாக அனைத்துக் கட்சி தலைவர்களோடும் கலந்து பேசி அந்த நாளை நிர்ணயிப்பது என்ற அடிப்படையில் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தை இங்கே எதிர்க் சுட்சித்தலைவர் அவர்கள் படித்துக் காட்டினார்கள். அந்தக் கடிதம் அரசின் பொதுத் துறையிலேயிருந்து அவர்களுக்குப்போய் இருக்கிறது. அதற்கு மாறாக முதலமைச்சரே கையெழுத்திட்டுக் கூட டி ஒ. லெட்டர் என்று சொல்வார்கள்-அந்த அடிப்படையில் கடிதம் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் என்ற உணர்வினை அவர்கள் பேசியபோது. என்னால் உணர முடிந்தது. அவர்களும் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர் களுக்குத் தெரியும். பொதுத்துறை பைலிலே வருகிற போது அதை ஏற்றுக்கெண்டு உத்தரவு இடுகிறபோது அந்த கடிதங்களுக்கு நகல்களாக ஆக்கிஅதிலே பொதுத்துறையை சேர்ந்த செயலாளர் கையெழுத்துப் போடுவது வழக்கம். அந்த வகையிலேதான் வந்திருக்கிறதே தவிர வறல்ல. அதை அவர்கள் ஓரளவிற்கு கண்ணியக் குறைவாகக் கருது வார்களானால், அதற்காக உண்மையிலேயே என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அந்தக் கடிதத்திலே அவர்கள் சொன்னதைப் போல ஆங்கில் நகலை தமிழிலே மொழி பெயர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் நேர்ந்துவிட்டதவறே தவிர வேறல்ல. மற்ற கட்சிக்காரர்களும் இந்திராகாங்கிரஸ் கட்சித் தலைவரும் எடுத்து சொல்கிறபோது, நீங்கள் ஒரு தேதியை குறிப்பிட்டு அழைப்பதுதானே என்று சொன்னார்கள். அந்தத் தேதி வசதிப்படவில்லை என்று வந்து விடுமே என்பதற்காகத்தான் எல்லோருடைய சௌகரியத்தையும் உத்தேசித்து கூட்டுவது தான் சரி என்ற முறையில் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக் கிறது. ஒன்றாதல் எதிர்க்கட்சித் தலைவர் இங்குள்ள தமிழர் என்பது இதுதானா? எங்களுடைய அடையாள மறியலுக்கும்