பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தனித் தனியாகத் தீர்மானம் கொண்டு வருவதை விட அரசாங்கமே ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அது மெத்தவும் பயனுள்ள தாக இருக்கும். அனைவரும் வரவேற்றுப் பேசலாம்* அதற்கு ஆவன செய்வோம் என்று சொன்னேன். அதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இந்தப் பிரச்சினையை நாங்கள் கட்சி நோக்கத்தோடோ கட்சி இலா பத்தோடோ அணுகவில்லை என்பதை அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். பிறகு அரசின் சார்பாக தீர்மானம் வந்து அனைவரும் வரவேற்றிருக்கிறோம். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு கட்சியிலும் உள்ள தமிழர்கள் தங்களுடைய உணர்வைக் காட்டிக்கொள்வது,அரசு எடுத்துள்ள முடிவிற்கு மேலும் வலுவைத் தருமேயல்லாமல்—வலுவைக் குறைக்க நிச்சய மாக அவைகள் பயன்பட மாட்டா.காந்தி காமராஜ் தேசீய காங்கிரஸ்கட்சி நண்பர் குமரிஅனந்தன் தலைமையில் உள்ள கட்சிகூட, இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஒரு நாள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அது பத்திரிகை களில் புகைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. இங்கே தீர்மானம் நிறைவேற்றிய பிறகு கூட-எனக்கு நினைவு-தி.மு.கழகம் அல்லாத வேறு பல கட்சிகள் எல்லாம் சேர்ந்து இலங்கைத் தமிழர்கள் சித்திரவதை குறித்து ஒரு கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். எனவே அவர்களுடைய கட்சி சார்பிலே கண்ட டனத்தை தெரிவிப்பதும், அனைத்துக்கட்சிகளும் அரசு உட்பட ஒட்டு மொத்தமாக ஒரு நாள் அர்த்தால் கடைப்பிடிப்பதும் இலங்கை தமிழர்களுக்கு சாதகமான விவகாரமே தவிர பாதகமான விவகாரம் அல்ல. சமூகவிரோதிகள் கைது செய்யப்படுவ தாக அமைச் சர் சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள் எல்லாம் கூட எனக்கு வந்துள்ள தகவல்படி இரவு ஒரு மணிக்கே கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். நான் கூட என்னுடைய அறிக்கையிலே திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கிறேன். மறியல் செய்கின்ற இடத்தில் — போலீசார் ஒழுங்கைக் காப்பாற்ற உதவி செய்யும் வகையில் வராலயத்தில் நுழைந்து விடாமல் பாதுகாக்க மறியல் செய்யப்போகின்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வது எப்போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைதான். சட்டம் - தூது