பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அதைத்தவறு என்று சொல்லவில்லை. ஆனால் ஊர்வலம் புறப்படுவதையே தடுப்பதும், இரவே கைது செய்யப்படு வதுமான முறை சரிதானா என்றுதான் கேட்கிறேன். இதற் கும் அர்த்தாலுக்கும் எந்தவிதமான முரணும் கிடையாது. அர்த்தால் நடக்கின்ற நேரத்தில் நிச்சயமாக தி.மு கழகம் ஒத்துழைப்பு தரும். ஆனால் எல்லா கட்சித் தலைவர்களும் எடுத்துக் காட்டியதைப் போல 25ம் தேதி அன்று ஒரு கடி தம், 26ஆம் தேதி வைத்துக் கொள்ளலாமா என்று கேள்வி கேட்டு எழுதுவது என்பது, முதலில் அர்த்தால் என்று அர சின் சார்பில் எடுத்துச் சொல்லிவிட்ட போதிலும், அதனை நடத்துவது பற்றி ஒரு மனநிறைவான கருத்து இல்லையோ என்ற சந்தேகத்தைத்தான் எங்களுக்குத் தோற்றுவிக்கிறது பண்ருட்டி இராமச்சந்திரன்:- 25-ஆம் தேதி கடிதம் எழுதி 26ம் தேதி அழைப்பது என்பது எப்படி தவறான காரியமாகும்? எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர்.- 26-ஆம் தேதி கூட் டத்தை வைத்துக் கொள்ளலாமா என்று எங்களுக்கு எழுதி ஹாஜா செரீப் அவர்களுக்கு எழுதி, சங்கரைய்யா, அழகிரி சாமி, குமரி அனந்தன், நெடுமாறன், மற்றும் முஸ்லீம்லீக் உறுப்பினருக்கு, ஜனதா கட்சி உறுப்பினருக்கு, இவர்களுக் கெல்லாம் எழுதி, ஒவ்வொருவரும் தங்களுக்கு இந்த தேதி வசதி, இந்த தேதி வசதி என்று தேதி குறிப்பிட்டு பதில் எழுதினால் அதற்கு முடிவு என்னவாகும். நீங்களே ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதிவிட்டால் எனக்கு வசதி பட் டால் நான் வருகிறேன். இல்லாவிட்டால் எங்கள் கட்சியின் துணைத் தலைவர் வருகிறார். அப்படி ஏற்பாடு செய்யப் பட்டி ருக்க வேண்டுமேயல்லாமல், வைத்துக் கொள்ளலாமா? என்பதற்கு ஒரு ஆலோசனை என்பது சிலை வைப்பதற்கு பீடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டலாமா என்பதைப் போலத்தான் இருக்கிறது.