பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பேராசிரியர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேராசிரியர்:- ஆளும் கட்சிசார்பில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, இந்த தேதியில் அர்த்தால் நடைபெறும். 31-ஆம் தேதி நடக்கும் என்று சொல்லிவிட்டால் இதற்காக ஒரு கூட்டமே தேவையில்லை- -31 ஆம்தேதி நடத்தலாம் என்று நான் ஆலோசனையைச் சொல்கிறேன். பேரவைத் தலைவர்:- 31-ஆம் தேதி சட்டமன்றம் இருக்கிறது. அதுமுடிந்த பிறகு வைத்துக் கொள்ளுங்கள். பண்ருட்டி ராமச்சந்திரன்:- அந்த தேதியை இங்கே சட்டப்பேரவையில் அறிவிக்க அரசு தயாராக இருக்கிறது. இளையபெருமாள் (இந்திரா காங்கிரஸ்):-எதிர்க் கட்சித் தலைவர் அவர்களுக்கு அதிகாரி எழுதிய கடிதம் பற்றிச் சொல்கிற போது ஆங்கிலத்தின் தமிழாக்கம் என்று அமைச் சர் சொன்னார். அன்பார்ந்த கருணாநிதி என்றுதான் அந்தக் கடிதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட எழுதவில்லை. அமைச்சர் அவர்கள் கூட, “அது தவறு என்றுகருதுவாரேயானால் வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று தான் சொன்னார். தவறு என்பதை அமைச்சர் ஒப்பு கொள்கிறாரா? அந்த அதிகாரி செய்தது சரி என்கிறாரா? பட்ட விஷயம் எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய பெயர் சம்பந்த என்பதால் கேட்க கூச்சப்படலாம். அது இந்த அவையின் மரியாதையைப் பொறுத்தது. எதிர்க்கட்சி தலைவர் தனக்காக எப்படி வாதிட முடியும்? ஒரு அரசாங்க அதிகாரி எழுதியிருக்கிறார். பண்ருட்டி இராமச்சந்திரன்:- நான் முதலில் சொன்ன ஆங்கில !இலக்கணத்தால் வருகிற தவறு இது, முகவரியில் டாக்டர் எதிர்க்கட்சித் தலைவர் என்று போட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர்:- இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான பிரச்சினை பற்றிப் பேசும் போது நான் 'என்னுடைய மரியாதைக்காக கவலைப்படுகின்ற பிரச்னை யாக மாறிவிடக் கூடாது என்று கருதுகிறேன். முதலமைச் சரோ மற்ற அமைச்சர்களோ கடிதம் எழுதுவதாக இருந் தால் கூட இப்படி எழுத மாட்டார்கள். அதிகாரி அப்படித் தான் எழுதியிருக்கிறார். அப்படித்தான் எழுதுவார்- ஆங்கில மொழி பெயர்ப்பை இப்படி தமிழுக்கு கொண்டு வரக்