பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கூடாது: யாருக்கு எழுதினாலும் முறையாக எழுதுவது நல் லது. அதிகாரிகளுக்கு அப்படிப்பட்ட குறிப்புகளை அரசின் சார்பில் தர வேண்டும். நெடுமாறன்:-இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆளுங் கட்சி எதிர்க்கட்சி, எல்லோரும் ஒன்று பட்டு இருக்கிறோம் என்பதைக் காட்ட, 31-ஆம் தேதி அர்த்தால் நடத்தி விட லாம். பேரவைத்தலைவர் பேரவைத் தலைவர்.- அதனைக் கூடிப்பேசி செய்து கொள்ளலாம்• பண்ருட்டி ராமச்சந்திரன்:-31-ஆம்தேதி தலைவர் தெரி வித்த மாதிரி சட்ட சபை நடக்க வேண்டும். அர்த்தால் என்று சொல்லி விட்டால் சட்டசபை நடத்த முடியாது. தடை உடைந்தது! கழகத்தவர் கைது! சென்னை ஆக, 29- இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் கண்டித்து சென்னை மாவட்டக் கழக சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழக அரசின் தடை உத்தரவையும் மீறி - பல்லாயிரக் கணக் கான கழகத் தோழர்கள் வந்து குழுமினர். இவர்களில் மாவட்டச் செயலாளர் ஆர். டி. சீதாபதி சட்டப் பேரவை உறுப்பினர்கள் என். வி. என். சோமு, து. புருடோத்தமன் கழக மாணவர் அணிச் செயலாளர் இரா. கணேசன் உட் பட 250 பேரை மட்டுமே போலீசார் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைவாக நேற்றிரவே 200 கழக தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் நடத்திவரும் இனவெறி படுகொலையைக் கண்டித்து இன்று காலை அண்டு சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டிசீதாபதி தலைமை யில் எழுச்சியும், உணர்ச்சியும் மிகுந்த கண்டனப் பேரணி நடைபெற்றது.