பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 யிருந்த கழகத் தோழர்கள் எழுப்பினர். வாழ்த்து முழக்கங்கள் பேரறிஞர் அண்ணா சிலையை நோக்கி பேரணி புறப் பட்டது, பேரணியின் முன்னால் "இலங்கையில் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து தி.மு.க. அடையாள மறியல்,, என்று பொறிக்கப்பட்ட பெரும். பதாகையை கழகத் தோழர்கள் பிரகாசமும், அறிவு மணியும் ஏந்தி வந்தனர். " 14 அவர்களைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்களும், மகளிர் அணியினரும் "சிங்கள வெறி யர்களே! இலங்கைத் தமிழர்களை கொடுமைப் படுத்தாதீர்! "இந்தியப் பிரதமர் அவர்களே! இலங்கைத் தமிழர் களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்!” “ தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!" "இலங்கைத் தமிழரைக் கொடுமைப் படுத்தாதே" "தமிழக அரசே! கலைஞர் நடத்தும். கண்டனப் பேரணிக்குத் தடை போடாதே!" என்று வந்தனர். உணர்ச்சிகரமான முழக்கங்களை எழுப்பி பேரணிக்கு அரசு போட்டிருந்த தடையையும் மீறி- கழகத்தோழர்கள்-மடை திறந்த வெள்ளம் போல் அண்ணா சாலைக்கு வந்தனர். அண்ணா சாலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் ஊர்வலத்தினரை வளையம்போல் சூழ்ந்து நிறுத்தினர். இந்தத்தடையினையும் மீறி இன உணர்வுமிகுந்த கழகத் தோழர்கள் முன்னேறிச் சென்றனர். உடனே போலீசார் தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டி ருப்பதை நினைவுபடுத்தி, தடையை மீறிய கழகத்தோழர் களையும், மகளிர் அணியினரையும் கைது செய்து லாரிகளில் ஏற்றிச் சென்றனர். இதே நேரத்தில் தடையை உடைத்துக் கொண்டு ஆர்.டி,சீதாபதி, என்.வி.என்.சோமு, து.புருடோத்தமன், இரா.கணேசன் டி.ஆர்.பாலு ஆகியோர் தனி காரில் வந்து இறங்கி முழக்க மிட்டவாறே அண்ணாசிலையைக் கடந்து முன்னேறிச் சென்றனர். இல-3