பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 யாரும் கைது செய்யப்படவில்லை. தடை விதிக்கப் பட வில்லை. ஆனால் தி.மு.க. மீது மட்டும் வேண்டும் என்றே குற்ற இயல் திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்து 150 பேரை சிறையில் வைத்திருக்கிறார்கள். எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினை, எம்.ஜி.ஆர். அடக்கு முறைப் பிரச்சினை ஆகிய இரண்டுக்கும் சேர்த்துத் தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். 15-9-81 வரை இப்போது பட்டியல் அறிவிக்கப்பட் டுள்ளது. அதற்குப் பிறகு, மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், தொழிலாளர் அணியினர், மாணவர் யினர் ஆகியோர் தொடர்ந்து ஈடுபடுவார்கள். இவ்வாறு தலைவர் கலைஞர் பேட்டி தந்தார். (தலைவர்-கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி 1-9-81) உலகத் தமிழர் பேரியக்கம் துவங்க வேண்டும்! பம்பாய் நகரில் தமிழ்ப்பேரவைக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பேசியதாவது.- தமிழர்களுடைய நிலை உலகம் எங்கும் எப்படி இருக் கிறது என்று நாம் வேதனைக்கு ஆளாகி இருக்கிற நேரத்தில் இந்தக் கூட்டம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்று நான் கருதுகின்றேன். எனக்கு முன்னாலே பேசிய நம்முடைய நண்பர்கள் அளை வரும் இலங்கை எரிந்து கொண்டிருக்கிறது என்பதனைச் சுட்டிக் காட்டிஞர்கள். சிங்களவர் நிகழ்த்திய கொடுமைகள் ஏறத்தாழ இருபதாண்டு காலமாக தொடர்ந்து வன் முறை வெ றியர்களுடைய தாக்குதலுக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதும், தமிழ் மகளிர் தங்களுடைய கற்பை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவானதும், அவர்களுடைய மங்கள நாண் புனைந்த மணாளர்களை மரத்திலே கட்டிவைத்து வீட்டு அவர்களுக்கு நேராகவே அவர்தம் துணைவியரை சிங்களக் கொடுமையாளர்கள் கற்பழித்துக் கொல்வதும் இலங்கையிலே கடந்த கால நிகழ்ச்சிகளாக இருந்தன என்று