பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாம் எண்ணிப் பெருமூச்சு விட்டால் போதாது. அவைகள் நிகழ்காலத் தொடர்கதையாகவும், இன்னும் முடியாத தொடர்கதையாகவும் இலங்கைத் தீவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணி நாம் கண்ணீர் விட் டால் போதாது. தமிழன் என்றோர் இளம் உண்டு. அந்த இனம் எங்கெங்கு சிதறிக் கிடந்தாலும் அப்படிச் சிதறிக் கிடக்கின்ற அந்த இனத்திற்கு 'வெங்கொடுமைச் சாக்காட் டில் விளையாடும் தோள்கள், எங்கள் வெற்றி தோள்கள்” என்று உறுதி எடுத்துக் கொள்கின்ற ஒரு வீர குணம் உண்டு என்பதை நிருபிக்கின்ற வகையிலேதான் உலகெங்கும் பரவிக் கிடக்கின்ற ஏறத்தாழ ஏழுகோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் இன்று பதறிப் போய் இருக்கிறார்கள்; பதட்டம் அடைந் திருக்கிறார்கள். இலங்கையிலே தமிழர்கள் அவதிப்படுவது மாத்திரமல்ல, தங்களுடைய தாய் மண்ணான தமிழ் நிலத்தை விட்டு இந்தியாவிலேயே வேறு மாநிலங்களிலே பரவிக் கிடக்கின்ற தமிழர்களுக்குக் கூட அத்தகைய ஒரு ஆபத்து—அவலம்— அவதி—இவைகள் ஏற்படுகின் றன என்பதைக் கேள்விப்படும் பொழுது மிகுத்த சஞ்சலத்திற்கு நாம் ஆளாகின்ற ஒரு நிலை ஏற்படத்தான் செய்கின்றது. அந்தமானிலும் தமிழன் ஆட்டிப்படைக்கப்படுதல் இங்கே மராட்டிய மண்டலத்தில் தமிழகத்திலே இருந்து வந்து குடியேறியிருக்கின்ற மக்களுடைய நிலை என்னவென் பது நான் சொல்லி நீங்கள் யாரும் புரிந்து கொள்ள வேண் டிய அவசியத்திலே இல்லை. இந்தியாவிலேயே பெரிய குடிசைப் பகுதி என்று சொல்லக்கூடிய தாராவி, அந்த தாராவியிலே வாழுகின்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள். எவ்வளவு நாற்றத்திற்கு இடையே-எவ்வளவு சுகாதாரக் கேடுபாடுகளுக்கிடையே எவ்வளவு நோய் நொடிகளுக்கு இடையே தங்களுடைய நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதை நான் அறியா தவன் அல்ல. தமிழகத்தினுடைய சந்தன மரங்களை வெட்டி வெளி நாடுகளுக்கு நாவாய்களிலே அனுப்பிய தமிழன் இன்று அந்தச் சந்தன வாடை இல்லா விட்டாலும் பரவாயில்லை.