பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சரி, அப்படிப்பட்ட ஒரு பேரியக்கத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அது வரையில் நடைபெறுகிற கொடுமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு நாங்கள் அந்தப் பேரியக்கத்தைத் தொடங்கப் போகிறோம்—அது வரையிலே இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளுங் கள் என்று ஆறுதல் அளிப்பது நியாயமா? நேர்மையா? நீதியா? அப்படிச் சொன்னால் நம்முடைய உடலிலே ஓடுவது தமிழ்க் குருதியா? இந்தக் கேள்வி வராமல் போகாது? கண்ணீர்த் திரையில் காணும் கோரம்! எனவே தான் இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமை களை இன்றைக்குத் தாய்த் தமிழகத்திலே இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் கண்களிலே நீர்த்திரை விழவிழ அந்த நீர்த்திரையின் வழியாகப் பார்த்துக் கொண்டே பரபரப் படைகிறான் -பதைக்கிறான்-திகைக்கிறான்— திக்குத் தெரி யாமல் விழிக்கிறான். என்ன செய்ய முடியும்? இலங்கை இன்றொரு நாடு. வேறு ஒரு நாடு. இந்தி யாவில் நாம் வாழுகிறோம். வெளி நாட்டு உறவுகளை இன்றைக்கு கவனிக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்பு மத்திய பேரரசுக்கு இருக்கிறது. வெளிநாட்டு உறவுகளைப் பொருத்த வரையிலேமத்தியப் பேரரசோடு ஒத்துழைப்பது என்கிற கொள்கையை உடைய வர்கள் நான் சார்ந்திருக்கின்ற தி.மு.கழகத்தினர். எனவே வெளி நாட்டு உறவு பாதிக்கப்படக் கூடாது. அதே நேரத்திலே இலங்கையிலே ரத்தம் சிந்திக் கொண் டிருக்கிறார்கள்-மானத்தைப் பறிகொடுத்துக் கொண்டிரூக் கின்றானே அவனுடைய நிலையையும் நாம் உடனடியாகத் துடைத்தாக வேண்டும். அவனுடைய கண்ணீரையும் நிற்க வைக்க வேண்டும். அதற்கு என்ன வழி! வழி தெரியாமல் நிற்கும் தமிழர்! வழி தெரியாமல் தான் கை பிசைந்து நிற்கிறோம். இலக்கியத்திலே தான் படித்திருக்கிறோம்-ஒரு பாறையில்