பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 வெண்ணெய் வைக்கப்பட்டு, பாறையிலே வைக்கப்பட்ட வெண்ணெயைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று இரண்டு கைகளும் இல்லாத ஒரு ஊமையினிடத்திலே சொல்லி விட்டுப் போய் காலையிலே ஐந்து மணிக்கு பாறையிலே வைக்கப்பட்ட வெண்ணெயை 'கையில்-ஊமை கை இல்லாத அந்த ஊமை பாதுகாத்துக் கொண்டிருக்கிற நேரத்தில்,வெயில் எரிக்கத் தொடங்கி, வெய்யில் வேகமாக எரிக்க எரிக்க உச்சி வெயில் ஏற ஏற வெண்ணெய் உருகத் தொடங்கும் பொழுது கையும் இல்லாத வாயும் இல்லாத அந்தஊமையால்அந்த முடவனால் எப்படி உருகிக் கொண்டி ருக்கின்ற வெண்ணெயைக்காப்பாற்ற முடியாதோ-அதே கையில் 'ஊமை' நிலையிலேதான் இந்தத் தமிழகத்திலே வாழுகின்ற தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணும் பொழுது என் மனம் குமுறுகிறது; கொந்தளிக்கும் கடலாகிறது. பத்திரிகையிலே செய்தி வருகிறது. படித்துப் பார்க் கிறோம். படித்துப் பார்த்தப் பிறகும் உயிரோடு தான் இருக்கிறோம். தமிழனுடைய உயிரைப் போக்கி உடலைக் கூறு கூறாக்கி, அவனுடைய தசைகளைப் பாளம் பாளமாக்கி அவைகளைக் கூடையிலே போட்டு "இங்கே தமிழனுடைய மாமிசம் விற் பளைக்குக் கிடைக்கும்” என்று எழுதி வைக்கப்படுகின்ற காட்சி இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுவதாக ஏடு களிலே செய்தி வருகிறது என்றால் அதைப் பார்த்த பிறகும் துடிக்காமல் இருக்கின்ற இதயம் ஒரு மனிதனுக்கு இருக் கின்றது என்று யாராவது சொல்வார்களேயானால் அவன் பிறக்கும் பொழுதே இருதயம் இல்லாமல் பிறந்து விட்டான் என்றுதான் சொல்ல முடியுமே தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. இத்தகைய கொடுமைகளுக்கு எல்லாம் நிவாரணம் காண, இனியும் வெளி நாடுகளில் நம்முடைய தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளில் இருந்து அவர்களை மீட்க,எங்கு வாழ்ந்தாலும் கலாச்சாரம், நம்முடைய பண் பாடு, நம்முடைய இலக்கியம், நம்முடைய இனம், இப்படி ஓடிக் கொண்டிருக்கின்ற அந்த இழை அறுந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள இந்தத் தமிழ்ப் பேரவை பேரியக்க மாக மலர்ந்திட வேண்டும்.