பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இது அரும்பு, ஓராண்டு காலத்து அரும்பு, இதற்கு அவர்கள் தமிழ் அகாடமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் 'அகாடமி' என்ற ஆங்கிலச் சொல் தமிழ் என்கிற அந்தத் தனித் தமிழ்ச் சொல்லோடு இணைகிறதா என்றால் இணைய வில்லை. ஆனால் அகாடமி என்று இருந்தால்தான் சில காரி யங்களை அதிகார பூர்வமாக நடத்திக் கொள்ள முடியும் என்பது நிறுவியவர்களுடைய எண்ணம். நேற்றுக்கூட நான் இதனுடைய தலைவர் நண்பர் இராமசந்திரன் அவர்களுடனும், நண்பர் சிவப்பிரகாசம் அவர்களுடனும் மற்றவர்களுடனும் கலந்து உரையாடிய போழுது சொன்னேன். ஆங்கிலத்திலே தமிழ் அகாடஜி என்றும், தமிழிலே எழுதும் போது பம்பாய் தமிழ்ப் பேரவை என்றும் குறிப்பிடுங்கள் என்றும் சொன்னேன். அதைநீங் களே நாளைய தினம் விழாவிலே சொல்லுங்கள். அதை ஏற்றுக் கொள்கிறேம் என்று சொன்னார்கள். ஆக முதலி லேயே ஒப்புக் கொண்டு, நேற்றைக்கே ஒத்திகை பார்க்கப் பட்டு இன்றைக்கு உங்கள் முன்னால் இது அரங்கேற்றப்பட் டிருக்கிறது என்பதை மாத்திரம் நான் எடுத்துக் கூற கட மைப் பட்டிருக்கின்றேன். இலங்கைத் தமிழர்களுக்காக சென்னை மாநகரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கைத் தூது வருடைய அலுவலகத்தின் வாயிலில் எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்-பலர் இருக்கலாம்-இருந் தாலும் கூட, இங்கே எங்களுடைய கட்சியைச் சேர்நதவர் கள் என்று நான் சொல்வதற்குக் காரணம்—இந்தத் தமிழ்ப் பேரவையிலிருந்து என்னையும், என்னுடைய கட்சியையும் பிரித்து நான் பேசுகிறேன்-கட்சியிலே உள்ளவர்கள் தமிழ்ப் பேரவையிலே இருக்கலாம், ஆனால் கட்சி அதிலே இருக்கக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்திலே ஈடுபட்டு, நூற்று ஐம்பதுக்கு மேற் பட்டோர், சென்னை மத்திய சிறைச்சாலையிலே இன்றைக்கு வாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்? அவர் களுடைய கண்டன ஊர்வலம் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்று கேட்டால், எங்களுக்கு அளிக்கப்படுகின்ற