பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பர் எம். ஜி. ஆருக்கு என்னுடைய - நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் இது அனைவரும் சேர்ந்து நடத்துகின்ற ஒல் அர்த்தால் என்றாலும்கூட இடையிடையே அவரவர்களால் இயன்ற கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவித்தாக வேண்டும். ஒரு வாரப்பத்திரிகைக்குப் பேட்டியளித்த இலங்கையின் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனே அவர்கள் ஒன்றை குறிப் பிட்டிருக்கின்றார்கள். 'பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் கருணாநிதிக்குச் சொல்ல வேண்டும், -என்ன சொல்ல வேண்டுமாம். இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் தனி நாடு கேட்கக் கூடாது; இதைக் கருணாநிதி இலங்கையிலே உள்ள தமிழர் களுக்குச் சொல்ல வேண்டும் என்று இந்திரா காந்தி அம்மை யார் கருணாநிதிக்குச் சொல்ல வேண்டும் என்று ஜெயவர்த் தனே கூறி இருக்கிறார்கள் என்றால்.திடீரென்று வெடித்து விட்ட ஒரு நிகழ்ச்சியல்ல இலங்கையில் இன்றைக்கு ஏற்பட் டிருக்கின்ற நிகழ்ச்சி. குமுறிக் குமுறி வெடித்த எரிமலை! . இலங்கையிலே ஏற்பட்டுள்ள நிகழ்ச்சி இருபதாண்டுக் காலமாக கொஞ்சங் கொஞ்சமாகப் பொங்கிப் பொங்கி இன்றைக்குக் குமுறி வெடித்திருக்கின்ற எரிமலை என்று சொன்னால் அதை யாரும் மறுத்திட இயலாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இலங்கையிலே நடைபெற்ற கொடுமையைக் கண்டித்துப் பேரணி நடத்தி இருக்கின்றோம்-அண்ணா அவர்களுடைய தலைமையில். இலங்கைத் தூதுவருடைய அலுவலகம் வரையிலே ஊர்வலம் சென்று அந்த ஊர்வலத்திற்கு அண்ணா தலைமை ஏற்று, நாங்கள் எல்லாம் அண்ணா அவர்களோடு சேர்ந்து சென்று அதன் பிறகு, இலங்கை தூதுவருக்குத் தரவேண்டிய மகஜரைக் கொண்டு போய் கொடுத்திருக்கின்றோம். இல-4