பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தமிழால் ஆவேசத்தை ஊட்ட முடியும்; தமிழுக்கு உணர்ச்சியுண்டு, தமிழ்தென்றலாகவும் வீசும், எரிமலை யாகவும் குமுறும் என்பதை எடுத்துக் காட்டியவர் தேசீயக்கவி சுப்பிரமணிய பாரதியார். அந்த பாரதியாருடைய நூற்றாண்டு கொண்டாடப்படு கின்ற நேரத்தில், இந்தத் தமிழ்ப் பேரவையினுடைய ஆண்டு விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த பாரதியும், பாரதிதாசனும் அவர்கள் வழி வந்த கவிஞர்களும் தமிழர்களுக்கு-தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுகின்ற கருத்துக்களை எல்லாம் நெஞ்சிலே நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பழைய வரலாறுகளை மாத்திரம் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டிருந்தால் போதாது. எவ்வளவோ புகழுக்கு உரியவர்கள் இன்றைக்கு அங் கிங்கெணாதபடி எங்கெங்கும் சிதறிக்கிடக்கிறார்கள். சிதறிக் கிடப்பது மாத்திரமல்ல. சீர் குலைந்து கிடக்கி றார்கள். அப்படிச் சீர்குலைந்தவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கிற சக்தியாகத்தான் தமிழர் இயக்கம் உருவாக வேண்டும். இன்றைக்கு பம்பாயில் ஏற்பட்டிருக்கின்ற இந்தத் தமிழ்ப் பேரவை போல் பல்வேறு மாநிலங்களிலே-பல்வேறு நாடுகளிலே ஆங்காங்கு இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் அவரவர்களுடைய முயற்சிக்குத் தக்கவாறு தமிழ் மன்றங் களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். என்றாலும், அவை களை எல்லாம் ஒரு இணைப்பு மன்றங்களாக ஆக்குகின்ற அளவிற்கு அவர்களும் முன் வந்து உலகத் தமிழ் பேரியக்கம் ஒன்று நிறுவி, உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற தமிழர் களை ஆளுவதற்கல்ல- ஆபத்திலே இருந்து காப்பாற்று வதற்கு- அவர்களுடைய கலாச்சாரத்தை மங்காமல்-மறை யாமல் காப்பதற்கு அந்தப் பேரியக்கம் உருவாக வேண்டும். அப்படி உருவாக வேண்டும் என்பதற்கான விதையை இந்த ஆண்டு விழாவிலே நாம் நட்டு விட்டு அதற்குத் தண் ணீர் ஊற்றி அதைச் செடியாக, கொடியாக வளர்க்க வேண் டிய கடமை எல்லாத் தமிழர்களுக்கும் உள்ள உரிமை என்று கூறிக் கொள்கிறேன். (பம்பாய் தமிழ்ப் பேரவையில் 31.8.81 அன்று தலைவர் கலைஞர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி)