பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அரசும் இணைந்து நடத்துகிற அர்த்தால் அறிவிக்கப்பட இருப்பதால் - அதற்கிடையே தி.மு.கழகம் அறப்போரில் அதுவும் ஒருநாள் அடையாளமாக அறப்போரில் ஈடுபடக் கூடாதாம்! அது மாபெரும் பாதகச் செயலாம் -அதாவது தி.மு.கழ கம் அப்படியொரு அடையாள மறியலை நடத்துவதால் அதனை ஆட்சியாளரால் பொறுத்துக்கொள்ள முடியாதாம்! அர்த்தால் நடக்குமென அவையில் அறிவித்த பிறகு மற்ற கட்சிகள், இலங்கைப் பிரச்சினைக்காக கண்டனக் கூட்டங்கள் நடத்தலாம்! ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம்! உண்ணாவிரதம் நடத்தலாம்! தி.மு.கழகம் மட்டும் அந்தத் திக்கு நோக்கிச் செல்லக் கூடாதாம்! ஏனென்றால் இருபதாண்டுக் காலமாக இலங்கைத் தமி ழர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு சிங்கள வெறி யர்களுக்கு எதிராக முழக்கமிடும் இயக்கமல்லவா தி.மு. கழகம்; அதனால் அந்தக் கழகம் தனியாகச் சிங்கள வெறி யரை எதிர்த்து எந்தக் குரலும் எழுப்பக் கூடாதாம்! எ இப்படியொரு அநீதி'யை “நீதி”யெனக் கூறிக் கொண்டு சட்டமும் ஒழுங்கும்- தனது பாய்ச்சலை நமது கழகத் தின் மீது நடத்துவதை நாட்டுக்கு உணர்த்திடும் பொறுப்பு நமக்கு உண்டு! அந்தப் பொறுப்பினை நிறைவேற்றவே, செப்டம்பர் மூன்றாம் நாள் முதல் நமது அறப்போராட்டம் தொடங்கு கிறது. ஒவ்வொரு நாளும் கழக முன்னணியினர் தலைமையில் கழகச் செயல்வீரர்கள், அரசின் தடையை மீறி அறப்போரில் ஈடுபடுவர்! சிங்களவரால் சீரழியும் தமிழர்களுக்காக, நாம் இங்கே சிறையினில் ' ' தவம்” இருப்போம்! சிறையில் இருக்கும் உடன் பிறப்புகளையும்- சிறையேகிட அணிவகுக்கும் உடன்பிறப்புகளையும் வாழ்த்துகிறேன்! உங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பினை நானும் பெற இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்!