பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 செய்திகள் வருகின்றன. அப்படி வருகின்ற பிணங்களை அதி காரிகள் எடுத்துப் புதைத்து விட்டு, அப்படி பிணமே ஒதுங்க வில்லை என்று சொல்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அந்த அதிகாரிகளும் தமிழர்கள் தான். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்; அவர்கள் இப்படிச் செய்வது உண்மை யாக இருக்குமானால் அது கடும் நடவடிக்கைக்கு வேண்டியதாகும். உள்ளாக இன்று காலையில் கூட எனக்கு இது குறித்து செய்தி வந்து, நான் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறேன். இவ்வளவு பிணங் கள் தொடர்ந்து இலங்கையில் விழுந்து கொண்டிருப்பதால் நம்முடைய எதிர்ப்பு உணர்ச்சியைக் காட்ட மாணவர்கள் இந்த அடையாள நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் கள். மாணவர்களின் அந்த உறுதி வாய்ந்த நெஞ்சத்தை நான் பாராட்டுகிறேன். என்றென்றும் கடல் கடந்து வாழ் கிற தமிழர்களுக்கு நம்முடைய அனுதாபமும், பாதுகாப்பும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, இடையிடையே இப்ப டிப்பட்ட எத்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் 8-ம் தேதி நடைபெறப் போகிற அர்த்தாலிலும் நாமனைவரும் பங்கு பெற்று இலங்கை அரசு நடத்துகின்ற அராஜகங்களைக் கண்டிக்கின்ற வகையில் தமிழர்கள் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, மாணவர்கள் இன்று தொடங்குகின்ற அடையாள உண்ணாநோன் பினைத் தொடங்கிவைக்கின்றேன். (சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்து 2-9-81-ல் கலைஞர் ஆற்றிய உரை)