பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 களையும் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்து அவர் கள் மீது குற்றப்பிரிவுகள் பலவற்றைத் தொகுத்து வழக் கும் தொடர்ந்து அவர்களின் ரிமாண்டு காலம் 15 நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை எல்லாம் வழி அனுப்பி வைத்தவன் என்ற முறையில் அவர்கள் இன்னும் திரும்பி வராத காரணத்தால் என்னுடைய கடமையை நான் நிறை வேற்ற வேண்டிய வனாக இருக்கிறேன். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிற தாய், பள்ளிக் கூடம் போன பிள்ளை திரும்பி வராவிட்டால் தெருவோரத் திலே நின்று அந்தத் திக்கை எதிர்பார்த்து இருப்பாள். பிள்ளை வருவானா? என்று எதிர்பார்த்திருப்பாள். வரவில்லை என்றால் பிறகு அவளே பள்ளிக்கூடம் நோக்கிச் செல்வாள் பிள்ளையைத் தேடி பிள்ளை இருக்கின்ற திக்கு நோக்கிச் செல்வோம் என்று அங்கே செல்வாள். அதைப் போலத் தான் பிள்ளையைத் தாய் வழியனுப்பி வைத்ததைப் போல், நான் சீத்தாபதியையும் மற்றவர்களையும் இலங்கைத் தமி ழர் பிரச்சினைக்காக அறப்போராட்டத்திற்கு வழி அனுப்பி வைத்தேன். அவர்கள் திரும்பி வரவில்லை. என்ன ஆனார்களோ என்று பார்க்கக் காத்திருக்கிறேன். திரும்பி வராவிட்டால் நானும் அவர்கள் இருக்கிற இடத்திற்குச் செல்ல வேண்டியவனாக இருக்கிறேன் என்பதைத் தான் நேற்று முன்தினம் அறிக்கை வாயிலாக நான் தெரிவித்தேன். அடையாள மறியல் என்றநிலை மாற்றப்பட்டு தொடர் மறியலாகி விட்டதற்குக் காரணம் நாங்கள் அல்ல. நாட் டிலே நடைபெறுகிற அரசுதான் என்பதையும் தமிழ்ச் சமுதாயப் பெருங்குடி மக்களுக்கும், உலகெங்கும் வாழ்கிற தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் உரக்கக் கூறிவிட்டு அந்த பணியில் நாங்களே எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக் கிறோம். (தூத்துக்குடியில் 3.9.81 அன்று நடைபெற்ற ஒரு மணவிழாவில் தலைவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி)