பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தத்தோடு ஊறிய பிரச்சினை! திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இலங்கைப் பிரச் சினை. ஏறத்தாழ இருபது-இருபத்து ஐந்தாண்டு காலமாக நம்முடைய இரத்தத்தோடு ஊறிய பிரச்சினை இலங்கையிலே வாழுகின்ற தமிழர்கட்கு ஓர் இன்னல் என்றால், அவர்கள் மீது தூசு பட்டிருந்தால் அவர்களுக்குத் துன்பம் துயரம் என்றால், துடித்து எழக்கூடிய பட்டாளம் தமிழகத்திலே தாயகத்திலே-திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய பட்டாளம்தான்! இந்த உணர்வை ஏற்று இருக் கின்ற அண்ணா காலத்திலிருந்து இந்தக்காலம் வரையில், திராவிட முன்னேற்றக் கழகம் பதைத்துப் போய் — பதறிப் போய் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து- அவர்களுக் குத் தந்தி மூலம் தகவல்களைத் தெரிவித்து - சென்னைக்கு அமிர்தலிங்கத்துடன் பேசி-இலங்கையிலே நடை பெறுகின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ரீதியில் நம்முடைய கண்டனக் குரலை எழுப்பினோம்! வந்த சட்டமன்றத்திலே இலங்கைப் பிரச்சினை பற்றித் தீர் மானம் வந்தபோது, நம்முடைய கருத்துக்களை அழுத்தந் திருத்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அர்த்தால் நடத்தப்படும் என்றார்கள் சொன்னார்களே தவிர, அதிலே வேகம் காட்டப்படவில்லை. எட்டாம் தேதி என்றார்கள். இப்போது பன்னிரண்டாம் தேதி என்று மாற்றப்பட்டிருப்பதாக எனக்கு மாலையிலே- தகவல்! அர்த்தாலில் தி. மு. க. ஒத்துழைக்கும் அதற்கிடையில் நான் சேட்பதெல்லாம், எல்லோரும் சேர்ந்து அர்த்தால் நடத்துகிறோம். சரி! அதே நேரத்தில் அந்தந்தக் கட்சியும் தன்னுடைய கண்டனத்தை இலங்கை பிரச்சினைக்கு காட்டக்கூடாது? அந்த உரிமை கிடையாதா? ஏன்- நான் பக்தர்களுக்குச் சொல்கிறேன், பிள்ளையார் கோவில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நேற்றோ அதற்கு முன்தினமோ விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் கோவிலிலே மாலை நேரத்திலே பிள்ளையாரை ஜோடித்துப் பிரார்த்தனை நடத்துவர்.