பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பம்பாய் நிகழ்ச்சிகள் முடிவுற்று மறுநாள் செப்டம்பர் முதல் நாள் காலை விமானத்தில் சென்ளை திரும்பினேன். கழகப் பொருளாளர் சாதிக் அவர்களிடம் அந்த மூவாயிர ரூபாயையும் கொடுத்து அதனை திருவொற்றியூரிலுள்ள தன பதி குடும்பத்தாரிடம் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண் டேன். அவரும், மா. வெ.நாராயணசாமியும் மாவட்டச் செயலாளர் ஆறுமுகமும், நகரச் செயலாளர் பழனிச் சாமியும்,மற்ற நண்பர்களும் சென்று மறைந்த தனபதியின் துணைவியாரிடம் அந்தத் தொகையை செப்டம்பர் முதல் நாள் மாலையிலேயே அளித்து, அதற்கான கையெழுத்தையும் பெற்றுள்ளனர். அன்னையார் சோகமே உருவாக நின்று, தனபதியின் துணைவியார் அமுதா அவர்கள் கண்கலங்கிட அந்த நிதியை நன்றி உணர்வுடன் பெற்றுக்கொண்டகாட்சி புகைப்படமாக 'தினகரன்' இதழில் வெளிவந்தது. அந்தப் படத்தையும் தனபதியின் துணைவியார் அமுதா அவர்கள் நிதியைப் பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்திட்ட தாளையும் இத் துடன் இணைத்திருக்கிறேன். கொடுத்த நிதியை தனபதியின் குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்என்று எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் நெல்லையில் பேசியிருப்பது எவ்வளவு பச்சை பொய் என்பது உனக்கும் ஊருக்கும் தெரிய வேண்டும் என்பதற் காகத்தான் இந்த விபரங்களையெல்லாம் தெரிவிக்க வேண்டி வந்தது! உதவிநிதியை நன்றி கூறிப் பெற்றுக் கொண்டது மாத் திரமல்ல; அடுத்து இரண்டொரு நாட்களுக்கெல்லாம் தன பதியின் நினைவுச் சடங்கிற்கான அழைப்பை அவரது சகோ தரரே தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து எங்களிடம் கொடுத்து விட்டு அன்பினை ® வெளிப்படுத்தி விட்டுச் சென்றார். அதற்குப்பிறகு நடைபெற்றது என்னவென்று எனக்குத் தெரியாது! மூவாயிர ரூபாய் நிதியை அந்தக் குடும்பத்தினர் திருப்பி அனுப்பிவிட்டனர் என்று செய்திகள் வெளியிடப் பட்டன. அதைத் தொடர்ந்து எம். ஜி. ராமச்சந்திரன், நெல்லை யில் இப்படியொரு அபத்தமான சொற்பொழிவை ஆற்றி யிருக்கிறார்.