பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தனபதி இலங்கையில் கொல்லப்பட்ட செய்தி கிடைத் ததும் அது குறித்துச் சட்டப் பேரவையில் குரல் எழுப்பி விளக்கம் கேட்டவன் நான்! கண்ணீர்மல்க முரசொலியில் கடிதம் எழுதியவன் நான்!

    • இலங்கையில் விழுந்தது எங்கள் கட்சிக்காரன் பிணம்!

நாங்களே சும்மாயிருக்கும்போது உங்களுக்கேன்அக்கறை? என்று பேரவையில் ஒரு அமைச்சரே கேட்டார். பரவாயில்லை; உடனடியாக அந்தக் குடும்பத்திற்கு மூவாயிர ரூபாய் தந்த காரணத்தால்-அவர்களுக்கு இப் போது இருபத்தையாயிர ரூபாய் கிடைத்திருக்கிறது. திருப்பி அனுப்ப வேண்டிய நெருக்கடி தனபதியின் குடும்பத்திற்கு ஏற்பட்டு விட்டதே என்ற வருத்தம் நமக் கிருந்தாலும் கூட, நம்மால் அந்தக் குடும்பத்திற்கு இருபத் தையாயிரம் கிடைத்ததே என்ற ஆறுதலும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படாமல் இல்லை! அன்புள்ள மு.க. (கலைஞர் 31-8-81 அன்று எழுதிய கடிதம்) தி. மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் பம்பாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பம்பாய் தி. மு. கழக சார்பில் ரூ.2,000/-ம், பம்பாய் தமிழ் அகாடமி சார்பில் ரூ.1,000/.ம் ஆக மொத்தம் ரூ.3,000/- (ரூபாய் மூவாயி ரம் மட்டும்) தனபதி குடும்ப நிதிக்கென அளிக்கப்பட்ட தொகையினை இன்று கழகப் பொருளாளர் திரு. சாதிக் பாட்சா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன். P. அமுதா 8-9-1981