பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பிரதமரின் நல்லெண்ணம்! இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மை யார் அவர்களும் தனது நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு விட்ட கொடு மைகளுக்குப் பரிகாரம் காண்பதில் இதயசுத்தியோடு இருக்கிறார் என இந்த நிர்வாகக் குழு உணர்கிறது. ஆனால் அதே நேரத்தில் எம். ஜி. ஆரால் கைது செய்யப்பட்ட தி. மு. கழகத்தினர் நானூறு பேர் இங்கே சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் உடனடி யாக விடுதலை செய்ய வேண்டுமென்று எம். ஜி. ஆர். அரசை இந்த நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது. அவர்களை விடுதலை செய்வது ஒன்றே தலைவர் கலைஞர் அவர்கள் 15-ஆம் தேதி போராட்டத்துக்கு தலைமை தாங் கும் நிலையை மாற்றக் கூடியது என்றும் நிர்வாகக் குழு அறிவிக்கிறது. கைது செய்யப்பட்டு விட்ட கழகத்தினர் அனைவரையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன் விடுதலை செய்ய இந்த அரசு தவறுமேயானால் கழகத் தலைவர் கலைஞர் தலைமை தாங்கி சென்னையில் மறியல் அறப் போராட்டம் நடத்து வது என்ற முடிவு உறுதிபடுத்தப் படும் என்பதை இந்த நிர்வாகக் குழு தெரிவித்துக் கொள்வதுடன் சென்னையில் தலைவர் கலைஞர் அறப்போரில் ஈடுபடுவதையொட்டி தமிழ கம் முழுவதும் மாநிலம் தழுவிய மறியல் அறப்போர் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் என்று இந்த நிர்வாகக் குழு அறிவிக்கிறது. தலைவர் கலைஞர் பேட்டி! நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு மேற்கொள்ளப் பட்ட முடிவுகளை கழகத் தலைவர் கலைஞர் பத்திரிகையாளர் களுக்கு எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து பத்திரிகை யாளர்கள் எழுப்பிய வினாக்களுக்குத் தலைவர் பதிலளித்தார் அவை வருமாறு:- செய்தியாளர்: மாவட்டத் தலைநகரங்களில் என்றைய தினம் அறப்போர் நடைபெறும்? கலைஞர்: அதுவும் 15ஆம் தேதி) அன்றைக்கேதான் (செப்டம்பர்