பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 களும் திரு. சித்தன் அவர்களும், அடையாள மறியலில் ஈடு பட்ட கழகத்தினரை விடுவித்திட அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அரசு அதனைக் காதில் போட்டுக் கொள்ளவே யில்லை. ஐந்து நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் மூன்றாம் நாள் முதல் இலங்கைக் கொடுமையும் எம். ஜி. ஆர் அரசின் பழி வாங்கும் போக்கையும் கண்டித்திட தொடர் மறியல் தொடங்கியது! இன்று வரை சுமார் ஐநூறு பேர் சென்னை மத்திய. சிறைச்சாலையில்! மகளிரும் பலர் இந்த அடக்குமுறையை சிறைக்கோட்டம் புகுந்துள்ளனர். எதிர்த்து இலங்கையில் கொல்லப்பட்ட தமிழன் தனபதி குடும். பத்திற்கு அ. தி. மு. க சார்பில் இருபத்திஐயாயிர ரூபாய் நிதி வழங்கப்படுகிறது! நாடாளுமன்ற துணைச்சபாநாயகரும் திருவொற்றியூர் உள்ளிட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நமது நண்பர் ஜி. லட்சுமணன் அவர்களின் வேண்டுகோள் கடிதத்திற்கு இணங்கி இந்தியப் பிரதமர் நிதியிலிருந்து தன பதி குடும்பத்திற்கு ஐயாயிர ரூபாய் நிதி அனுப்பப்படுவ தாகச் செய்திகள் வந்துள்ளன. பம்பாய் நிகழ்ச்சியில் அங்குள்ள தமிழ்ப் பேரவையின ரும் கழகத்தினரும் வழங்கிய மூவாயிர ரூபாய் நிதியை நமது பொருளாளர் சாதிக் அவர்கள், தனபதியின் குடும்பத்தா ரிடம் செப்டம்பர் முதல் தேதியன்று வழங்கினார். முதன்முதலாக முந்திக் கொண்டு வழங்கிவிட்ட கார ணத்தாலோ என்னவோ; அந்த நிதியைத் திருப்பி அனுப்பு மாறு செய்து விட்டனர். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டித்து ஒரே நோக்கில் செயல்படுகிறோம் எனினும்-அவரவர் பங் கினைச் செலுத்துவதும் அந்தந்தக் கட்சிகள்; தங்களது வாய்ப்புக்கேற்றவாறு கிளர்ச்சிகளை முறையாக நடத்து வதும் எப்படித் தவறாக இருக்க முடியும்?