பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குறுகிய உள்ளம்-கடுகினும் அளவில் சிறிய உள்ளம்- இந்தப் பொதுப் பிரச்சினையில் அணுகுமுறை எப்படியிருக்க வேண்டுமென்பதைச் சிந்திக்கும் ஆற்றலையிழந்துவிட்டதில் ஆச்சரியமிருக்க முடியாதல்லவா? எனவே தான் என்னுயிர் உடன் பிறப்பே! பரந்து விரிந்த பேருள்ளத்திற்குச் சொந்தக்காரரான அண்ணன் பிறந்த நாளில் கடுகு உள்ளம் கொண்டோரையும் அவர் தம் கொடுங்கோன்மையையும் நாட்டுக்கும் நானிலத்திற்கும் உணர்த்த அறப்போரில் குதிக்கிறோம்! அந்நாளில் வன்முறை தலைவிரித்தாடிச் செய்யும் பேச் சொன்றை நெல்லை மாநாட்டில் எம்.ஜி.ஆர். பேசியிருக்கின் றார்! அவரது நெல்லைப் பேச்சையொட்டித் திட்டங்கள் தீட்டப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன! அவர்கள் நடத்தட்டும் வெறியாட்டத்தை! ஆனால் நமது அறப்போர் அணிவகுப்பும்-மறியல் களமும் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்கிற அமைதி நிறைந்த தன்மை உடையவைகளாக விளங்கிடல் வேண்டும்! மாவட்டத் தலைநகர்களில் மறியலில் ஈடுபடவும், தண் டனைகளைத் தாங்கிக் கொள்ளவுமான வாய்ப்புள்ள உடன் பிறப்புகளின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்து கொள்ளவும்! மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு அமைதியான முறையில் மறியல்! சென்னையில் ஏற்கனவே அறிவித்தவாறு என் தலைமை யில் அறப்போர் மறியல்! செப்டம்பர் 15 காலையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்புள்ள அண்ணன் சிலைக்கு மாலை யணிவிக்கிறேன். பொதுச் செயலாளரும் பொருளாளரும், துணைப் பொதுச்செயலாளரும்-அண்ணன் சிலைக்கு மாலையணிவித்து விட்டு பின்னர் என்னை அறப்போருக்கு வழியனுப்பி வைப் பார்கள்! சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. தில்லையில் நடை பெற்ற மாநாட்டில் பேராசிரியர் தலைமையில் அண்ணன்