பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை வைத்தார்! 81 கல்லக்குடி அறப்போருக்கு வழியனுப்பி இன்று அண்ணன் சிலை முன்னால் பேராசிரியர் என்னை வழியனுப்பி வைக்க இருக்கிறார்! ‘‘என் தம்பி தனிமைச் சிறையிருக்கும் பாளையங் கோட்டை, எனக்கு யாத்திரைத் தலம்' என்று நெல்லையிலே தான் அன்றொருநாள் அண்ணா பேசினார்! அந்தச் சொற்கள்-செப்டம்பர் 15-ல் அண்ணன் சிலைக்கு எதிரே நிற்கும்போது என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்! அந்த இனிய ஓசையில் மகிழ்ந்தவாறு களம் நோக்கி- நடப்பேன்! இடர் எதுவரினும் ஏற்பேன்! அன்புள்ள மு. க. (கலைஞர் 13.9.81 அன்று எழுதிய கடிதம்) சென்னைப் பொதுக்கூட்டத்தில் கலைஞர் உரை சென்னை தெற்கு போக் ரோடில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற மறியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி:- முதலமைச்சர் இன்றைக்கு அறிக்கை விடுகிறார்-பத்தி ரிகை நிருபர்களிடத்திலே சொல்லுகிறார் நாங்கள் இனி மேல் மறியலே நடத்தமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்படி உத்தரவாதம் அளித்ததை கருணாநிதியே கூட ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி