பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 “விட்டால் எல்லோரையும் விடுதலை செய்து விடுகிறேன் என்று எம். ஜி. ஆர். சொல்லுகிறார். நான் அதற்குப் பதிலளித்து இருக்கிறேன், என்ன பதில்? பத்தாம் தேதி நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தலைமைக் குழுவினுடைய நிர்வாகக் குழுவில் நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திலே என்ன சொல்லி இருக்கிறோம் ? எப்படியும் மறியல் நடத்தியே தீர வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் அல்ல; ஒருநாள் அடையாள மறிய லில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடு- மற்ற கட்சிகளையெல்லாம் நடத்தாத விதத்தில் வேண்டு மென்றே திட்டமிட்டு-திராவிட முன்னேற்றக் கழகத்தை மாத்திரம்-ஏறத்தாழ 500 பேரை சிறையிலே இன்றைக்கு பூட்டி வைத்திருக்கின்ற காரணத்தால் அவர்களையெல் லாம் விடுதலை செய்யவேண்டும். 15-ம் தேதிக்குள்ளாக விடுதலை செய்யப்படுவார்களேயானால் 15-ம் தேதி நாங்கள் மறியல் செய்யத் தேவையில்லை. விடுதலை செய்யப்படா விட்டால் 15-ம் தேதி தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை யிலே மாத்திரமல்ல: தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் நடைபெறும் என்று தீர்மானித் திருக்கிறோம். அதற்குப் பிறகு என்ன உத்திரவாதம்? 15-ம் தேதிக்குள் விடுதலை செய்து விட்டால் மறியலே தேவையில்லை என்று தீர்மானத்திலே அறிவித்திருக்கிறோம், கருணாநிதி மாத்திரம் அல்லவே தலைமைக் கழகமே அறிவித் திருக்கிறதே! பிறகு எதற்காக எம். ஜி. ஆர். புது நிபந்தனை போடுகிறார்? உத்தரவாதம் கேட்கிறார்? எந்தத் தூதுவராலயத்தின் முன்பும் இனிமேல் மறி யலே நடத்தமாட்டோம என்று உத்தரவாதமாம்! நல்லவேளை. இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகம் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடாது என்று எழுதிக் கொடு என்று கேட்டாலும் கேட்பார். நான் அவருக்குச் சொல்லுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் தமிழர்களை வளர்ப்ப தற்காக-தமிழ்ச் சமுதாயத்தை வளர்ப்பதற்காக போராட்