பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முடியும். நான் உள்ளே சென்று விட்டால் அதைத் தீர் மானிக்க வேண்டிய பொறுப்பு வெளியிலே இருக்கிற பேரா சிரியருக்கும் சாதிக் அவர்களுக்கும் - நாஞ்சிலாருக்கும் தலைமைக் கழகத்திலே யாராவது மிச்சமிருந்தால் அவர் களுக்கும் தான் உண்டே தவிர எனக்கல்ல! எனவே, நாஞ்சிலார் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல எம். ஜி. ஆர். ராஜதந்திரமாக நடந்து கொள்ளப் போகிறாரா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தைக் களத்திலே இறக்கிவிட்டு அதை அழித்து விடலாம் என்று ஒரு தவறான கணக்கைப் போடப் போகிறாரா? அவருக்கு ஒன்றைமாத்திரம் சொல்லிக்கொள்வேன். நாங்கள் புறநானூறு பயின்றவர்கள். புறமுதுகிட்டு அறிந்தவர்கள் அல்ல. நாங்கள் திருக்குறளிலே படித்ததெல்லாம் - திருக் குறளைக் கற்று எங்களுடைய உள்ளத்திலே தெளிய வைத்துக் கொண்டு, பதிய வைத்துக் கொண்டு இருப்பதெல்லாம். கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் என்ற குறளைத்தான். தன்னுடைய கையிலே உள்ள வேலை போர்க்களத்திலே யானை மீது வீசி எறிந்துவிட, அது யானையின் மேல் தொற்றிக் கொள்கிற நேரத்தில் இன்னொருவன் வேலோடு எதிர்க்க வருகிற நேரத்தில் நான் எறிந்த வேல்; அந்த யானை யோடு போய்விட்டதே! இவனை எதிர்க்க வேல் இல்லையே என்று திரும்பிப் பார்க்கும் போது தன் மீது குத்தப்பட்ட இன்னொரு வேல் தன்னுடைய மார்பிலே தொற்றிக் கொண் டிருப்பதைப் பார்த்து அந்த வேலைப் பிடுங்கி எதிரியை வீழ்த்தினான் என்பது திருக்குறள். அந்தத் திருக்குறளைப் பயின்றவர்கள் நாங்கள். உன் மகன் எங்கே என்று கேட்டவனிடத்தில் ஒரு தாய் சொன்னாள். புறநானூற்றில்;-என் மகனா? அவன் எந்தப்