பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தால் தினத்தந்தி பத்திரிகையிலே எப்படிச் செய்தி வெளி யிட்டிருப்பார் தெரியுமா? என்று பேசி இருக்கிறார். இது இலங்கை மக்களுக்காக எம். ஜி. ஆர். விடுகின்ற கண்ணீரா! இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமை களுக்காக எம்.ஜி.ஆர். விடுக்கின்ற கண்டனமா? எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால், இது நம் வீட்டுப் பிரச்னை. நம்முடைய இனப் பிரச்சினை. நம்முடைய மொழி-மானப் பிரச்சினை. நம்மு டைய உதிரங்களுக்கு தசைக் கோளங்களுக்கு - நம்முடைய உடன் பிறப்புகளுக்கு-நம்முடைய சொந்தம், பந்தம், சுகிர் தம் அத்தனையும் கொண்ட இந்த இன மக்களுக்கு இலங் கையிலே இழைக்கப்படுகின்ற கொடுமைகளைக் கேள்விப் படுகின்ற நேரத்தில் யாரும் தூண்டிவிட்டு, யாரும் சொல் லிக்கொடுத்து, யாரும் அறிவுரை கூறி யாரும் உசுப்பிவிட்டு அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. நான் கடிதத்தில் எழுதி இருப்பது போல், தானாடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதைப் போல தானாகவே நம்முடைய தசை ஆடுகிறது. இரத்தம் கொதிக்கிறது. நம்முடைய கண்கள் குளமாகின்றன, நம்முடைய விழிகள் நீர் வீழ்ச்சிகளாகின் றன. ஐயோ! தமிழா! இலங்கையிலே படாதபாடுபடு கிறாயா?' என்ற அவலம் நம்முடைய இதயத்திலே நம்மை யறியாமல் முழங்குகின்றது. நாம் கைபிசைந்து நிற்கிறோம். நம்மால் எதுவும் ஆகி விடாது. காரணம், மத்திய அரசின் மூலமாகத்தான் நம் முடைய மனக் குறையை இலங்கை அரசுக்கு நம்மால் வெளிப்படுத்த முடியும். இலங்கைத் தூதுவர்கள் மூலமாக வும் வெளிப்படுத்த முடியும். நேரடியாக நாம் இலங்கையினு டைய எந்த சர்ச்சைக்கும் போகின்ற அளவிற்கு நாம் அரசி யல் தெரியாதவர்கள் அல்ல 'சர்வதேச' நிலைமைகள் புரியாதவர்கள் அல்ல. அகில உலக அரங்கில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அரிச்சுவடியைப் படிக் காதவர்கள் அல்ல. நான் இந்திரா காந்தி அம்மையார் அவர்களைக் கூட கேட்டுக் கொள்வதெல்லாம் இதிலே சட்டப் பிரச்சினை இருக்கட்டும். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமுள்ள