பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மறியல் களமே சென்றிடவில்லை1 அவர்களை சிறை யில் அடைத்து விட்டு, பொய்வழக்கும் தொடுத்துவிட்டு, தூதுவராலயம் என்றால் என்னவென்று தெளிபொருள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! என்ன தம்பி செய்வது! நரிக்கு நாட்டாண்மை கொடுத்து விட்டால் அது. கேட்கத்தானே செய்யும்” ““கிடை”க்கு எட்டு ஆடு -என்று நீ புன்னகை மூலம் பதில் அளிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அண்ணா! நான் புரிந்து கொண்டிருப்பதை நாடும் வேகமாகப் புரிந்து கொண்டுதான் வருகிறது! புகைச்சல் தானே என்று பொல்லாதவர்களால் அலட் சியப்படுத்தப்பட்டவைகள் தான் எரிமலைகளாகப் பொங்கி யிருக்கின்றன என்ற சரித்திரத்தைப் படிக்காதவர்கள்; அதிகாரமிருக்கும் வரையில் ஆட்டம் போடத்தான் செய் வார்கள்- உனது இந்தப் பொன்மொழியை உள்ளத்தில் ஏந்தி கரத்தினிலே நீ தந்த கொடியேந்தி — உன் பிறந்த நாளில் கடமையாற்றிடப் பயணம் தொடருகிறோம்; நாங்கள். இருக்குமிடமெல்லாம் நீ இருப்பாய் என்ற நம்பிக்கை யுடன்! உன் தம்பி, மு. கருணாநிதி (கலைஞர் 15-9-81 அன்று எழுதிய கடிதம்)

கலைஞர் கைது சென்னை, செப். 15- மனித உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அண்ணன் பிறந்த நாளான இன்று இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் கண்டித்தும், எம். ஜி. ஆரின் அடக்கு