பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 முறைகளைக் கண்டித்தும் அறப்போர் களம்புக முனைந்த தலைவர் கலைஞர். அவர் இல்லம் விட்டுப் புறப்படும்போதே கைது செய்யப்பட்டார். சிங்கத் தமிழர் தம் தலைவராம் கலைஞர்- அவர்கள் சிரித்த முகத்துடன் சிறை புகுந்தார். தலைவர் கைதான செய்தி தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது! சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதித்தது! கடைகள் அடைக்கப்பட்டன! வள்ளு வர் கோட்டம் அண்ணா சிலை அருகில் போலீஸ் வெறித்தாக்குதல் நடத்தியது. எண்ணிலடங்கா அளவு கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது. பலர் காயமுற்றனர். தமிழகத்தின் பல பகுதி களில் பல்லாயிரக் கணக்கானோர் கைதாகியுள்ள னர். தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்ட செய்தி வெளி யானதும் நாடெங்கும் பல இடங்களில் கொந்தளிப்பான. நிலைமை ஏற்பட்டது பல நகரங்களில் கடைகள் மூடப் பட்டன. பஸ்கள் நிறுத்தப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பு பட்டன. தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி கோவிலடி கிராமத்தில் பிருந்தாவன் என்ற 25 வயது வாலிபன் தீக் குளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் துறந்தான். தஞ்சை மாவட்டத்தில் முதல் நாள் மட்டும் ஐந்து பஸ்கள் எரிக்கப்பட்டன. சென்னை புதுக்கல்லுரியில் கலைஞரை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி செய்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. 16 ஆம் தேதி தூத்துக்குடி, திருப்பத்தூர் (வ.ஆ)ஆகிய நகரங்களில் முழு அர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது. 17 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு பஸ் எரிக்கப்பட்டது. தஞ்சை நகரில் முழு கடை அடைப்பு. நடைபெற்றது. பஸ்கள் முன் படுத்து மறியல் செய்யப் பட்டன. சேலத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். சென்னையில் காயிதே மில்லத்