பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வெளியே கல்லூரி, அண்ணா நகர் வைஷ்ணவா கல்லூரி, அம்பேத்கார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை விட்டு வந்தனர். 18 ஆம் தேதி மதுரையிலும் நெல்லையிலும் முழு அடைப்பு நடைபெற்றது. நெல்லையில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பட்டன. புதுக் கோட்டைமாவட்டத்தில் ஆலங்குடியிலும் பஸ்சுக்குதீவைக் கப்பட்டது. மதுரை புதூரில் பி.ஆர்.சி. டவுன் பஸ்சுக்கு. தீ வைக்கப்பட்டது. மதுரையிலிருந்து தேவக்கோட் டைக்குச் சென்ற பஸ் ஒன்று தேவக்கோட்டையில்கொளுத் தப்பட்டது. மதுரை கல்லூரி அருகே ஒரு பஸ் எரிக்கப் பட்டது. கலைஞர் விடுதலை கோரி பாண்டிச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள கழகத்தினர் பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலை' களிலும் அடைக்கப்பட்டனர். சிறைகள் எல்லாம் கழகத் தினரால் நிரம்பி வழிந்தன. சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு பஸ் எரிக்கப்பட் டது. சேலத்தில் கலெக்டர் அலுவலகம் முன்னால் தீக் குளிக்க முயன்ற 25 வயதுடைய செழியன் என்ற வாலிபன் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். கலைஞர் விடுதலை கோரி செப்டம்பர் 20ஆம் தேதியன்று திருச்சியில் பீமாநகரில் மனோகரன் என்ற 22 வயதுடைய வாலிபன் தீயிட்டுக் கொண்டு இறந்தார். கலைஞர் விடுதலை. கோரி கோவையில் எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டக் வந்தமுன்னாள் அமைச்சர்கண்ணப்பன் உட்படநூற்றுக்கணக் கானோர் கைது செய்யப்பட்டனர். அதே நாள் மதுரையில் தலைவர் கலைஞரின் செல்வன் மு.க. அழகிரி நள்ளிரவில் கைது. தினகரன் போட்டோகிராபர் காவலர்களால் தாக் கப்பட்டார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் வீரமணி தலைவர் கலைஞரின் விடுதலை கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தினார். இதில் விடுதலை வீரமணி திண்டிவனம் ராமமூர்த்தி எம்.எல். சி., அப்துல் சமத், எம்.பி., இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சிவாஜி மன்றத்தலைவர் தளபதி சண்முகம்