பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அப்பன்ராஜ் S. K. T. ராமச்சந்திரன். திராவிடர் கழக தலைமை நிலையச் நிலையச் செயலாளர் துரைசாமி திருமறவன். செஞ்சி ராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், விவசாயிகள்சங்கம் ஆகியவைகளும் தொழிலாளர்சார் பிலும் தலைவர் கலைஞர் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் முதலமைச்சர் யாரையும் விடுதலை செய்ய இயலாது, சட்டப்படிதான் காரியங்கள் நடைபெறும் என்று உறுதியாக பதில் அளித்தார். கபத அ செப்டம்பர் 21-ந்தேதி செங்கற்பட்டு மாவட்டத்தில் அர்த்தால் நடைபெற்றது. திருவொற்றியூரில் கழகத் தோழர்களின் கடைகள் அ. தி. மு. க.வினரால் பயங்கர மாகத் தாக்கப்பட்டு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. பெரியார் மாவட்டத்தில் தீக்குளிக்க வந்த லட்சுமி அம்மாள் கைது. நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன் னால் மறியல் செய்யச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கள் கழக முன்னணியினர் கைது. சென்னையில் 25ம் தேதி மாணவர்கள் முழு அர்த்தால் நடத்த திட்டமிட்ட தைத் தகர்க்க அரசு வெளிமாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக் கான போலீசாரை இறக்குமதி செய்து நகர் எங்கும் பீதி ஏற்படக்கூடிய நிலையை ஏற்படுத்தியது. பெரி தலைவர் கலைஞர் அவர்களை விடுதலை செய்ய வேண்டு மென்று கோரி திருவாரூரில் கிட்டு என்ற கழகத் தோழர் ஒருவர் தீக்குளித்து இறந்தார். அதைப் போலவே யார் மாவட்டத்தில் பெருந்துறையில் முத்துப்பாண்டியன் என்ற இளைஞன் தீக்குளித்து மறைந்தான். கோவை மாவட்டத்தில் பல்லடத்தைச் சேர்ந்த முத்துசாமி என்ற 15 வயது வாலிபன் தீக்குளித்து மருத்துவமனையில் சேர்க் கப்பட்டான். வேலூரில் ஜெகநாதன் என்ற வாலிப ரும், சேகர் என்ற வாலிபரும் தீக்குளித்து ஜெகநாதன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டி ருக்கிறார். திருச்சியில் தலைவரின் விடுதலை கோரி முழு அடைப்பு. நடைபெற்றது. நெல்லையில் சங்கரன் கோவிலில் வெள் ளத்துரை என்பவரும், தீக்குளிக்க முயற்சி செய்து காவலர் களால் கைது செய்யப்பட்டார். தலைவர் கலைஞர் சிறையில்