பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இலங்கையில் ஒரு வாரம்

பெண்மணிகள் எந்தத் தரத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

மண்டபத்தில் பாதி இடத்தைத் தாய்மார்களே அடைத்துக் கொண்டார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பகுதியிலிருந்து ஏதேனும் பேச்சுச் சத்தம் அல்லது ‘குவா குவா’ சத்தம் வரவேண்டுமே? அவ்வப்போது சொற்பொழிவை ரஸித்துச் சிரிக்கும் சத்தத்தைத் தவிர வேறு சத்தமே கிடையாது. சுருங்கச் சொன்னால், அங்கே வந்திருந்த தாய்மார்கள் தங்கள் மகவுகளைக்கூட மறந்திருந்தார்கள். குழந்தைகள் அழுகையை மறந்திருந்தன. ஆண் பிள்ளைகளோ சுருட்டுப் புகைத்தலைக்கூட மறந்து தமிழின்பத்தில் லயித்திருந்தார்கள். சபையிலிருந்தவர் யாருமே சுருட்டுப் புகைக்கவில்லை! ஸ்ரீ அருள் நந்தி கூடத்தான்! இந்த விந்தையை என்ன வென்று சொல்வது? அவர்களுடைய தமிழன்பை என்ன சொல்லிப் பாராட்டுவது ? இயலாத காரியம்.

இத்தகைய அருமையான தமிழன்பர்கள் ஆயிரக் கணக்காக உள்ள நகரத்தில் தமிழ்த் தாய்க்கு ஒரு சிறிய கட்டிடம் கட்டுவதுதானா பெரிய காரியம்? நல்ல முறையில் முயற்சி தொடங்கினால், இலங்கையில் வாழும் பதினைந்து லட்சம் தமிழர்களும் அந்தத் திருப்பணிக்கு உதவி செய்வார்கள் என்பது நிச்சயம்.

“அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் சொல்லும் வழக்கமில்லை என்றீரே? சென்ற இதழில் ‘ஏழரை லட்சம்’ தமிழரைப் பற்றிச் சொல்லியிருந்தீர்? இந்த இதழில் ‘பதினைந்து லட்சம்’ தமிழர் ' என்கிறீரே! ஏழு