பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

37

கப்பல் குண்டு போட்ட காலத்தில், கடற் பிரயாணம் மிக அபாயம் நிறைந்ததாயிருந்த காலத்தில், இங்கிலாந்துக்குக் கப்பலில் பிரயாணமானார். பிரயாணத்தின் போதே இலங்கையின் நிலைமையை விளக்கியும், சிங்களத் தலைவர்களுக்கு இழைத்த அநீதியை எடுத்துக் காட்டியும் ஒரு புத்தகம் எழுதினார். இங்கிலாந்து சேர்ந்ததும் அதை அச்சிட்டுப் பார்லிமெண்டு அங்கத்தினருக்கும் மந்திரிகளுக்கும் கொடுத்தார். பிரதமர் லாயிட் ஜார்ஜையும் மற்ற மந்திரிகளையும் பேட்டிகண்டு பேசினார். அந்த அபாயகரமான யுத்த சமயத்தில் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கருத்தையும் மாற்றினார். அதன் பலனாகச் சிங்களத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அது மட்டும் அல்ல: மேற்கூறிய அநீதிக்குக் காரண புருஷரான பிரிட்டிஷ் கவர்னர் திருப்பி அழைக்கப்பட்டார். இம்மாதிரி கவர்னரைத் திருப்பி அழைத்தது என்பது அதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. அதற்குப் பிறகு, இந்தியாவில் வைஸராய் வேவல் திருப்பி அழைக்கப்பட்ட ஒரு சம்பவம் தான் நிகழ்ந்திருக்கிறது.

ஸர் பி. ராமநாதன் இலங்கை திரும்பி வருவதற்குள் மேற்கூறியவை நடந்துவிட்டன. எனவே, ஸர் பி. ராமநாதன் கொழும்பில் வந்து இறங்கிய போது அவருக்குச் சிங்களவர்கள் அளித்த வரவேற்பைப் போல் அதற்கு முன்னும் இலங்கை பார்த்ததில்லை; அதற்குப் பிறகும் பார்த்ததில்லை. குதிரைகள் பூட்டிய ரதத்தில் அவரை வைத்துக் கொழும்பு வீதிகளில் ஊர்வலம் விட்டார்கள். ஆயிரமாயிரம் மக்கள் வீதிகளில் இருபுறமும் நின்று ஜய கோஷம் செய்தார்கள். ரதம் ஒரு முக்கியமான நாற் சந்திக்கு வந்ததும் குதிரைகளை ரதத்தி-