பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

39

உத்தியோகம், வக்கீல் வேலை, உபாத்தியாயர் வேலை முதலியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள். வருங்காலத்தில் இவர்களுடைய நிலைமை என்ன ஆகும்? எனவே, பழந்தமிழர்களில் தீர்க்க திருஷ்டி உள்ளவர்கள் எல்லாரும் புதுத் தமிழர்கள் நடத்தும் பிரஜா உரிமைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று மனமார விரும்புகிறார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்களுடைய தமிழன்பைக் குறித்து முன்னம் மகிழ்ச்சியுடன் கூறினேன். இனியும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் அவர்களுடைய அரசியலைப் பற்றி அவ்வளவு மகிழ்ச்சியுடன் சொல்வதற்கில்லை. அதைப் பற்றிச் சோகரசம் கலவாமல் சொல்லவோ எழுதவோ இயலாதுதான்.

எனக்குத் தெரிந்தவரையில் இலங்கைத் தமிழர்களிடையில் நாலு அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஒன்று, பழைய நிதானக் கட்சி, இரண்டு, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் புதிய ஒத்துழைப்புக் கட்சி; மூன்றாவது, தமிழரசுக் கட்சி அல்லது சமஷ்டிக் கட்சி: நாலாவது, சுதந்திரக் காந்தீயக் கட்சி.

பழைய நிதானக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஸர் பி. ராமநாதனுடைய மாப்பிள்ளை ஸ்ரீ எஸ். நடேசன், ஸர் அருணாசலத்தின் குமாரர் ஸர் ஏ. மகாதேவா முதலியவர்கள். இவர்கள் தமிழர்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் பின்வாங்கியவர்கள் அல்ல. சிங்கள மந்திரிகளுக்கு இவர்களிடம் மரியாதை உண்டு. அவசியமானபோது ஒத்துழைத்தும் அவசியமானபோது போராடியும் வந்தார்கள்.

இவர்களுக்குப் போட்டியாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஏற்பட்டது. இதன் தலைவர் ஸ்ரீ பொன்னம்பலம்

இல. 3