பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இலங்கையில் ஒரு வாரம்

4

றுபது டன் ருஷிய டாங்கிக்கு இணையான ஆற்றல் வாய்ந்த ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் என்பவரைப் பற்றி முன்னர் குறிப்பிட்டேன் அல்லவா? அப்படிப்பட்ட ஸ்ரீ கே. வி. எஸ். வாஸின் ஆற்றலைக்கூட மீறிவிட்ட ஒரு செய்தியை இப்போது கூற விரும்புகிறேன். திருவாளர் விபீஷண அழ்வார் அவர்களுக்குச் சில நாளைக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்குக் கூறியே தீர வேண்டும். கூறாவிட்டால் விபீஷண ஆழ்வாருக்கு மன நிம்மதி ஏற்படாது.

திருவாளர் விபீஷண ஆழ்வார் தனிப்பெரும் சிரஞ்சீவித் தமிழர் என்பது ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்ப முடிந்த செய்தியாகும். இராவணன் எப்போது தமிழனோ, அப்போது அவனுடைய தம்பி விபீஷணனும் தமிழன்தான். இராவணன் தமிழன் என்பது அவனுடைய பத்துத் தலைகளின் மேலும் அடித்துச் சத்தியம் செய்து முடிந்துபோன செய்தி. அவன் முப்புரி நூல் அணிந்து, யாழ் என்னும் இசைக் கருவியை மீட்டிக் கொண்டு, சாம வேதத்தை ஓதிச் சிவபெருமானைப் புகழ்ந்து பாடிய திலிருந்து இராவணன் தமிழன் என்பது உள்ளங்கை தென்னங்கனியாக விளங்கியிருக்கிறது. இராவணனைத் தமிழன் என்றோ குறைந்த பட்சம் திராவிடன் என்றோ, நாம் ஒப்புக்கொண்டு விடுவதே நலம். இல்லாவிடில், நமது ஆராய்ச்சிக்காரர்கள் கிஷ்கிந்தா புரிவாசிகளுக்குத் தமிழர் பட்டத்தைக் கட்டித்தொலைத்து விடுவார்கள். வாலி இறந்ததும் தாரை புலம்பிய கட்டத்தை எடுத்துக் காட்டி, “ஒரு தனித்தமிழ்க் கைம்பெண்ணைத்தவிர வேறு யார் இப்படி அருமையாகப்