பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

இலங்கையில் ஒரு வாரம்

ஒருவர் சாட்சி சொல்லக்கூடும். ஆனால் அவரைத் தேடிப் பிடிப்பது கஷ்டம்!” என்றார்.

“அந்த மாதிரி வாய்மூல சாட்சி உபயோகமில்லை. எழுத்து மூலமான ஆதரம் வேண்டும்.”

இதைக் கேட்ட விபீஷணர் சுருசுருப்புடன் சென்று, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசி தாஸ் ராமாயணம், ராம நாடகக் கீர்த்தனை ஆகிய புத்தகங் களைக் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தார்.

அதிகாரி அவ்வளவு புத்தகங்களையும் புரட்டிப் பார்த்துவிட்டு, “இதெல்லாம் பழைய கதைகள். உபயோகமில்லை. திரேதா யுகத்துச் செய்தி இங்கே யாருக்கு வேணும்! 1938-ம் வருஷத்திலிருந்து 1945-ம் வருஷம் வரையில் நீர் எங்கே இருந்தீர்?” என்று கேட்டார்.

“இலங்கையில்தான் இருந்தேன்.”

“இதற்கு ஏதாவது தஸ்தவேஜு மூலமான சாட்சியம் இருக்கிறதா?”

“எந்த மாதிரி?”

“இந்தியாவிலிருந்து ஏதாவது கடிதம், ரிஜிஸ்தர், மணியார்டர் மேற்படி ஆறு வருஷங்களில் வந்ததுண்டா? வந்த கடிதங்களின் உறைகளைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறீரா?”

“இல்லை.”

“அப்படியானால், உமக்குப் பிரிஜா உரிமையும் இல்லை.”

இதைக் கேட்ட விபீஷணர் மூர்ச்சை யடைந்து விழுந்து எழுந்த பிறகு, “இனி இலங்கையில் இருப்பதா?