பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இலங்கையில் ஒரு வாரம்

“இந்த ஊரில் குப்பை கூளத்துக்கு மெத்த கிராக்கி போல் தோன்றுகிறது. கறுப்பு மார்கெட்காரர்கள் அமுக்கி விட்டார்களோ, என்னமோ?” என்றேன்.

“இல்லை ஐயா! திருவிழாவை முன்னிட்டு வீதி களைச் சுத்தம் செய்து வைத்திருக்கிறோம்!” என்றார் அதிகாரி.

“ஓகோ! அப்படியா?”

“வீதிகள் தூய்மையாக இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா ?”

“பிடித்திருக்கிறது! ஆனாலும் ஒரு குறை. வீதி களை யெல்லாம் சுத்தம் செய்து வைத்திருந்தால் மட்டும் போதுமா? ஏன் நெடுகிலும் ரத்தினக் கம்பளம் விரித்திருக்கக் கூடாது?” என்றேன்.

“ரத்தினக் கம்பளம் விரித்தால் தரை அழுக்காகி விடும், ஐயா!” என்றார் அந்தச் சுகாதார அதிகாரி.

நாலு வீதிகளையும் சுற்றிப் பார்த்த பிறகு ஆலயத்துக்குள் செல்ல நண்பர் பெரியசாமித் தூரன் விரும்பினார். நான் கண்டிப்பாக மறுத்து விட்டேன்.

நித்தியமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய்
[நீங்காச்

சுத்தமுமாய்.......”

என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். கடவுள் சுத்த வடிவமாக இருக்கிறார் எனில், அந்த நாலு வீதிகளிலும் அவர் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும். கடவுளைத் தரிசிக்க ஆலயத்துக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?

மேலும், ஒரு கட்டுரை எழுதும்போது எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போவது உசிதம் அல்ல. ஆகை-