பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இலங்கையில் ஒரு வாரம்

தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றிருக்கிறார். அவருடன் ஒத்துழைத்துப் பல ஆசிரியர்கள் தொண்டு புரிகிறார்கள். கொஞ்சம் இக்கட்டான நிலைமையை அடைந்திருந்த கொக்குவில் ஹிந்துக் கல்லூரி ஸ்ரீ பேரின்ப நாயகம் பொறுப்பு ஏற்ற பிறகு பெரிதும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலே இடறி விழுந்தால், ஒரு ஆசிரியர் மேல் நாம் விழும்படியாக இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? அங்கே படிப்பும் அதிகம், பள்ளிக் கூடங்களும் அதிகம். இது மட்டுமல்ல. தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியர் மேல் நாம் இடறி விழுந்தால் அந்த ஆசிரியர் தெருவில் ‘அப்படா!’ என்று கீழே விழுவார். அநேகமாக அவர் அரைப் பட்டினிக்காரராகவும் மெலிந்த மனிதராகவும் இருப்பார். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. அங்கே ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம். இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் (அதாவது ஹைஸ் கூல்களில்) ஆசிரியர்கள் 60 முதல் 120 வரை சம்பளம் பெறுகிறார்கள். தலைமை ஆசிரியர்களுக்கு 150 முதல் 250 வரை இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் நமது ஹைஸ்கூல்களையே ‘கோலேஜ்’ என்கிறார்கள்; ஆசிரியர்களுக்கு 200 முதல் 300 வரை கிடைக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கோ 400 முதல் 600 வரை சம்பளம். இன்னொரு விசேஷம் என்னவென்றால், இலங்கையில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து கொழும்பு யுனிவர்ஸிடி வரையில் மாணவர்கள் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. உபாத்தியாயர்கள், பேராசிரியர்கள், எல்லாருடைய சம்பளங்களையும் இலங்கை அரசாங்கமே கொடுத்து வருகிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை.