பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

69

அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறபடியால், கல்வித் துறைக்குத் தாராளமாகப் பணம் செலவு செய்ய முடிகிறது.

யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுவதோடுகூட, சமூக வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தும் பெற்றிருக்கிறார்கள். அரசியல் தொண்டிலும், கலைத் தொண்டிலும், இலக்கியத் தொண்டிலும் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள். பொது ஊழியத்தில் பற்றுக்கொண்ட ஆசிரியர்களில் வைத்தீசுவரக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீ அம்பிகை பாகன் ஒருவர். தோற்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி யிருந்தாரோ அப்படியே இவர் இன்றைக்கும் இளம் பிள்ளைத் தோற்றத்துடன் இருக்கிறார். பன்னிரண்டு வயதையும் எப்படித்தான் சாப்பிட்டு ஜீரணம் செய்து கொண்டாரோ, தெரியவில்லை. தோற்றத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் அவருடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. முன்னம் நான் பார்த்த போது கட்டைப் பிரம்மச்சாரியாக இருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பற்றும் தொடர்பும் கொண்டிருந்தார். நமது மாஜி கல்வி அமைச்சர் திரு அவிநாசிலிங்கத்தைப் போல் இவரும் நித்தியப் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவாரோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. இலங்கையில் சிங்களவரின் தொகை தாறுமாறாகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலைமையில், ஸ்ரீ அம்பிகைபாகனைப்போன்ற இளைஞர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்தால், இலங்கைத் தமிழர்களின் கதி என்ன ஆகிறது? ஆகவே, அச்சமயம், “பெண்ணைப் பெற்ற எந்தப் பாக்கியசாலியான தகப்பனார் ஸ்ரீ அம்பிகை