பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

இலங்கையில் ஒரு வாரம்


8

ள்ளிக்கூடத்தில் நான் படித்துக்கொண்டிருந்த போது, — சில நாள் படித்துத் தொலைத்ததுண்டு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன் — இந்தியா தேசத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வந்தது. “இந்தியா கிணற்றில் விழுந்துவிட்டது!” என்ற ஒரு பரிதாபமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லாரும் ஓடிப் போய்ப் பார்த்தோம். கிணற்றில் இந்தியா தேசம் விழுந்துதானிருந்தது. இதற்கு ஒரு பையனுடைய அஜாக்கிரதைதான் காரணம் என்றும் தெரிந்தது. ஆனால் அந்த நெருக்கடியான நிலைமையில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாரும் விழித்துக் கொண்டு நின்றார்கள். நான் அந்த நாளில் கேட்ட சில தேசியப் பிரசங்கங்களில் “தேசத்துக்காக நீங்கள் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டதுண்டா?” என்று நம் தலைவர்கள் அலறியது என் காதில் விழுந்தது. அது அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது. உடனே “இந்தியாவுக்காகத் துரும்பை எடுத்துப் போடுவது என்ன? ஒரு கல்லைத் தூக்கியே போடலாம்!” என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து முழுகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பேரில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டேன். உடனே இந்தியா தேசம் ஒரு ‘கீச்’ சத்தம் கூடப் போடாமல் தண்ணீரில் முழுகிப் போய்விட்டது.

இவ்வாறு இந்தியாவுக்குச் சேவை செய்ததினால் நான் அச்சமயம் அடைந்த கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி முடியாது. அன்று முழுதும் ஆசிரியர் கட்டளைப்படி பெஞ்சியின் மேல் நிற்கும் கஷ்டம் ஏற்பட்டது. அல்லாமலும் ஒரு புதிய இந்தியா தேசப்படம் வாங்கிக்கொண்டு