பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

83

செய்கிறவரையில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுதான் வாழ வேண்டும்! சிங்களவரிடம் போராடத்தான் அவர்களுக்கு வலிமை ஏற்படுமா?


9


ம்முடைய தமிழ் நாட்டு முன்னோர்களின் வழியைப் பின்பற்றி எங்கேயாவது ஒரு நாட்டுக்குப் படை யெடுத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. ஆனால், படையெடுத்துச் செல்வதற்கு படையல்லவா தேவை? என்னிடம் படையில்லை. படையிருந்தாலும்தான் என்ன? எதோ ஈழ மக்கள் நம்மவர்களாயிற்றே என்ற உரிமையுடன் படை எடுத்துச் சென்றால் யு. என். ஓ. சங்கம் குறுக்கே வந்து தொலைக்கும். தன் மனிதர், வேற்று மனிதர் என்று பாராமல் குண்டு போட்டுக்கொல்லும்! படையெடுப்பை அநியாயமாக வாபஸ் வாங்க வேண்டி வரும்.

படைதான் இல்லையே, பதிலுக்கு ஒரு குடையாவது எடுத்துப் போவோமென்றால் குடையும் சமயத்தில் சிக்கவில்லை. ஆகவே வெறுங்கையுடனேயே புறப்பட்டோம். வெய்யிலை வெய்யில் என்று நினையாமல், நிலாக்கதிர் என்று நினைத்துக்கொண்டு ஊர்காவற்றுறை, காங்கேயன் துறை, வல்வெட்டித் துறை முதலிய கடலோரப் பகுதிகள் வழியாகச் சென்றோம். இங்கேயெல்லாம் சமுத்திர ராஜன் சாந்த வடிவு கொண்டு இலங்குகிறான். மலை போன்ற அலைகளும் கடலின் கொந்தளிப்பும் இல்லை. மிக அடக்கமாக இருக்கிறது. நீர்ப்பரப்பு மிருதுவான சிறு அலைகள் இலங்கா தேவியின் பாதங்களை