பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இலங்கையில் ஒரு வாரம்

ஆனால் இந்த வழியில் சிறிது புகுந்து பார்த்ததில் எத்தனை எத்தனையோ தடைகள் மலை போலக் குறுக்கிட்டன. இந்த வழியில் தொண்டு செய்ய வேண்டு மென்ற ஆசை எனக்கு முன்னதாகவே பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை நன்கு அறிந்தேன். அவர்கள் வெகுதூரம் முன்னேறி என்னைப் போன்றவர்கள் அந்த வழியில் பிரவேசிப்பதற்கே இடமில்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் யார் யார் எனில், பொய் புளுகு, போர்ஜரி, கள்ளக் கையெழுத்து, கள்ள மார்க்கெட்டு, லஞ்சம், சிபார்சு — ஆகிய மகானுபாவர்கள்தான். அடிப் படையில் காங்கிரஸ் அங்கத்தினர் கையெழுத்து வாங்குவதிலிருந்தே அத்தகையோர் விடா முயற்சியுடன் வேலை செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய அஸகாய சூரர்களுக்கு முன்னால் நாம் எங்கே? ஆகவே எனக்குத் தெரிந்திருந்த இரண்டாவது வழியைத்தான் நான் தேட வேண்டியதாயிற்று.

அந்த இரண்டாவது வழி, தமிழ்நாட்டிலிருந்து சில நாளைக்கு எங்கேயாவது போய்விட்டு வருவதே. தமிழ் நாட்டில் இப்போது தலை போகிற பிரச்னையாயிருப்பது உணவுப் பிரச்னை ; அதாவது உணவு இல்லாத பிரச்னை. உணவு இல்லாத கேடு காரணமாகச் சில ஸ்திரீகள் குழந்தைகளை விற்பதாகச் செய்திகள் வந்தன. இன்னும் சில தாய்மார்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளைக் கூட விலை கூறி விற்று விடுவதாகப் பிரசுரமாயிற்று. உணவு இல்லையென்று குழந்தைகளைப் பெற்றவர்கள் விற்றல் வாங்கிக் கொள்ளுகிறவர்கள் அக்குழந்தைகளை என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமையில் ஒருவர் ஒரு வார காலமாவது வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு வந்தால், அந்த வரையில்