பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

இலங்கையில் ஒரு வாரம்


ஆம் ; தமிழ் விழாவை வரும் ஆண்டில் இலங்கையில் நடத்துவதினால் மட்டும் நம்முடைய நோக்கம் ஈடேறி விடாது. நம் நாட்டில் நடைபெறும் தமிழ் விழாக்களுக்கு நம் இலங்கைச் சகோதரர்கள் சிலரையும் அழைக்கவேண்டும்.

இதன் மூலம் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் உள்ள நீண்டகால நட்புக்கு எவ்வளவோ நன்மை உண்டு. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாயிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.