பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

இலங்கை எதிரொலி


 (கடலில் எறிந்த கல்லின்) நிலையையடைந்திருந்தால் அது உலகம் சுற்றியிருக்காது.

கலை, கருத்திலிருந்து புறப்பட்டு கல்லில் புகுந்து, கட்டையில் குடியேறி, கடலில் மிதந்து, கம்பியில் நுழைந்து, காற்றில் கலந்து, அணுக்களைத் தொட்டு, ஈத்தரைத் தாவி, ஆகாயத்தில் பிரயாணம் செய்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

கலேயை யாரும் திரும்பிப் பார்க்காமல் கலை கலைக்காகவே இருக்கட்டும், அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று மக்கள் அதை அனாவசியமாக விட்டு விட்டிருந்தால் இன்று நாம், நாடகத்தை, ஓவியத்தை, காவியத்தை, கலை என்று சொல்லத் தேவையில்லே. நாடகத்தில் சில கருத்துக்களை அமைத்து கடிகர்களே உண்டாக்கி அழகு செய்து ஆடுபவர்களையும், அதைக்காண வருபவர்களையும் ஆனந்தமடையச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. நாடகத்தைப் பார்க்கின்றவர்கள் முதல் நடிக்கின்றவர்கள் ஈராக அனேவ்ருமே மேடையில் ஏறி அவரவர்கள் வாய்ககு வந்ததைச் சொல்லி, கையும் காலும் திரும்பிய பக்கம் எல்லாம் கூத்தாடும்படி விட்டுவிடலாம். அப்போது அதுவும் ஒரு பைத்தியக்காரக் கலை என்ற பெயர் பெற்றுவிடும். ஆகவே கலேயை வெகு கவலையோடு வளர்க்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்துவிடுகிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம். அடுத்தபடி, கலையை நாம ஏன் வளர்க்கவேண்டும் என்ற கேள்வி எழும்பலாம். ஐயம் தோன்றலாம்.