பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இலங்கை எதிரொலி


அறியாததல்ல. இவ்வளவுக்கும் காரணம் இயக்கத்தின் வளர்ச்சிதான். ஒரு இயக்கம் வளருவதற்கும் அழிவதற்கும் இரண்டே இரண்டு காரணங்கள்தான் உண்டு. ஒன்று அது போராட்ட சக்தியைப் பெறாமல் போவது. மற்றொன்று அதன் கோரிக்கைகள் நியாயமற்றதாகி விடுவது. இந்த முறையில் பார்த்தால் நமது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு போராடும் சக்தியும் உண்டு, கோரிக்கையும் நியாயமானது. ஆகவே இந்த இரண்டுமே நமது கழக்திற்கு அசைக்கமுடியாத அஸ்திவாரங்களாய்விடுகின்றன. இந்த உண்மையான காரணங்களை சாதாரண மக்கள் முதல் மாணவர்கள் வரையிலும் சரியாக புரிந்துகொண்டதின் காரணத்தினால்தான் நம் இயக்கத்தில் ஆயிரமாயிரமாகச் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இந்த சூட்சமத்தை யறியாதவர்கள்தான் நம் இயக்கம் இவ்வளவு வேகமாக வளரக் காரணமென்ன என்று ஆச்சரியப்படுகின்ருர்கள்.

இந்த இலங்கையிலேயே ஒரு கட்சியின் தலைவர் என்னைத் தனியாக சந்திக்க வேண்டுமென்று விரும்பினார். நானும் அதற்கு சம்மதித்தேன். அதுவும் இரவு 10-மணிக்கு என்றார். சரி என்றேன். அவர் பங்களாவிலேயே சந்திக்கவேண்டுமென்றார், சரி என்றேன். நான் அந்த சந்திப்பில் சந்தேகப்படவில்லை. ஏனெனில் அந்த சந்திப்பை ஏற்பாடுசெய்தவர்கள் நம்முடைய இயக்கத் தலைவரல்லவாயினும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். ஆகையால் நான் சந்தேகப்படவேண்டிய தில்லாமல் போய்விட்டது. அவர் யார் என்று இங்கே நான் குறிப்பிடாமலிருப்பதற்காக மன்னிக்கவேண்டும். நீங்களும் தெரிந்துகொள்ள விரும்பாதீர்கள். அவர் விருப்பப்படியே சந்திக்கச் சென்றிருந்தேன். ஆனால் அவர் மாத்திரம் தனியாக இல்லாமல் ஐந்தாறு பேர்களை தன்னோடு